கவி
எத்தனை எழுதுகிறேன்
யார் யாரோ படித்து விட்டனார்,
பாராட்டுக்கள் பல தூரும்
பாவங்களும் வந்து சேரும்.
காதல்,காதலர்
மேனி, மின்மினி
மிச்சம், யச்சம்,
மிகுதி, தகுதி
ஆண், பெண்
ஆசை, மீசை என
எழுத்துகள் அடிக்கி வந்திருக்கிறேன்.
முகம் தெரிய நபரும்
முத்தமிட்ட நபரும்
ரசித்து மிகைக்கையில
நானும் கவிஞன் என்ற கர்வம் கர்ப்பம் கொள்ளும்.
விருதுகள் உண்டோ..?
ஆம்.
வார்த்தை வர்த்தகமா..?
ஆம்.
வலிகள் மொழியாகுமா..?
ஆம்.
தனிமையில் தோழித்துணையா.?
ஆம்.
மௌனம் இசை வழியா.?
ஆம்.
அத்தனையும் அணைத்தெடுத்து
கட்டி முடிச்சியிட்டு
குழித்தோண்டி புதைக்க இடம் பார்த்து
கவிதை என பெயர் வைத்தேன்.
ரசிக்க ரசனை இல்லை
எழுதி கிழித்து இடமெறிந்தாலும்
இறுதி சடங்கு போல் என்னும் உறுதி இல்லை.
வந்தோர் மகிழ்ச்சி
சென்றோர் மகிழ்ச்சி
சிக்கி தவிக்கிறேன்
சில வலைப்போல்.
காட்டுக்குள் ஓடும் போது
காலுக்கு தான் பாரம்
நிலமாக இருக்க வேண்டி
சருக்காக ஆனதென்ன..
விதையை விரும்பும் மனிதர் யாரோ
புத்தன் கூட பூ விரும்பி
கவிதை கிறுக்கின் கவலை தானே
கண்கள் யாவும் நீர் தழும்பி...
Comments
Post a Comment