சுவர் எங்கும் உன் வாசனை,
சுருண்டு கிடந்து விழ்ந்துருக்கிறேன்.

நீ இருக்கிறாய் என்று நான்
என்றும் நம்பியதில்லை,
நீ இல்லாத போதே நாடகம்
மெல்ல நடக்கிறது.
அன்பு காதல் எல்லாம் கானல்
போல் முன்னே செல்லும் போது
மறைக்கிறது.

இப்போதெல்லாம் நான் யாரிடமும் அதீதம் பேசுவதில்லை,
பேசி அணைத்தவர்களும்
அனல் வீசுகிறார்கள்.

நான் இருந்த இடத்தில் தான் நீ
இருந்தாய்,
நான் வந்த பின்னே தானே
உன்னை அழைத்து வந்தேன்
எல்லாம் அவ்வாறு தானே;

எனக்கு முன் நீ செல்வது என்னடா நீயாயம்.?
நான் தானே சென்றிருக்க வேண்டும்,
தனியாக விட்டு சென்ற
 விட்டாயே;
இனி இரவுகளில் உன்னிடம் மறைத்து நான் எவ்வாறு அழுவேன்.?
வந்து விடுக்கிறேன் விரைவில்
உஷ்னம் தாங்க தவிக்கவில்லை இங்கே.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்