கூண்டு
விழி மூடினாலே விரைந்து வந்துவிடுகிறது வீக்கம்.விதவயாய் வாழ்க்கை
எப்போதோ மாறிவிட்டது.சன்னல் திறந்தால் கூட காற்று கம்பிகள் தாண்டி வர மறுக்கின்றன. கம்பியை தூக்கி எரிந்தாலும்
அனல் என்னமோ குறைவதே இல்லை.
அனாதையாக நிற்கின்றேன் என்று தெரியும்.
ஆறுதலான உறவுகள் இருந்தும் அதை மனம் ஏற்கவில்லை. ஆறுதலாய் இருந்தவை எல்லாம் என்னிடம் இருந்து விளக்கிடவே விரும்பிகிறேன் இப்போதெல்லாம். நான், அழுகை, ஏதோ இரண்டு, மூன்று கதை, என்னுள் ஏதோ செய்யும் இசை, ஏக்கம், வலி, காதல், களவி, ஏமாற்றம், வலி என்று நன்றாக தான் இருந்தேன். இப்போது சிரிக்க பழகி இருக்க கூடாது என்ற எண்ணம். இளைப்பாறிய இடம் தான் என்று மனம் ஏற்கவில்லை. சில உயிர்கள் உலகத்தில் வலி தாங்க பிறந்தவை போலும்.வரிசியில் என் பெயர் இருப்பதைப் பார்க்க மனம் மகிழ்கிறது.
நான்கு பத்துகள் வாழ்ந்த பாதி கிழம், பாவம் என்னென்ன துன்பங்களை சுமக்கிறது தன்னுள் என்பதை எண்ணுவதா, இரண்டு பத்தில் நான் சுமப்பதே பெரிது என்று கர்வம் கொள்ளுவதா.? விடை இல்லை. யாரும் யாவரும் வேணடாம் என்பதே சிறந்த துணை என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன்.
போதுமடா வாழ்க்கை என்ற எப்போது நான் நினைத்து சளித்துவிட்டேன். சாவே நேரிட்டாலும் சாய்ந்து கொண்டு சென்று விடாலாம் போல் தான் இருக்கிறது. சிலரிடம் மண்ணிப்பு கோர வேண்டும். என்னை நம்பி
நான் கழுத்தறுத்த உயிர்கள் உண்டு. என் சத்தியமாக நான் வேண்டுமென்றே ஏதும் செய்வதில்லை. நிலைப்புரியாது, ஏது நல்லது என்று நான் அறிவதை தான் செய்தேன்.
துன்பம் ஒன்றும் எனக்கு புதிதல்ல. அது நான் பிறக்கையில என்னுடன் பிறந்தது, என்னுடன் வளர்ந்தது, நான் சாகும் போது என்னுடன் சேர்ந்து வரும். என் தாய், தந்தை, தம்பி, காதல், மனைவி, மக்கள் எல்லாம் அதுதான்.
தனிமையில் கூட்டத்தையும் கூட்டத்தில் தனிமையையும் பழகி வலி சேர்த்த நான் வழி மாறி போன சாபம் சூழ்ந்து என்னை நினைவூட்டல் செய்கிறது. நான் சொல்ழது போல் சில உயிர்கள் இங்கே வெறும் துன்ப பயில வந்து கூண்டு பறவைகள். எங்களுக்கு அந்த சூழ்ந்த கூண்டு மட்டும் தான் உலகம்.
வெளியே எடுத்து ரசிக்கலாம் என்னை, ஆனால் என் கூண்டினில் வந்து வாழ முடியாது. வாழவும் வேண்டாம்.
Comments
Post a Comment