பயந்தனை
இடித்தோறும் வந்து இதயம் வீங்கும்
மடித்தோரம் பாரம் மயங்கி விழுக
பிரிதல் வேண்டாமை என நானும் நொந்து
சதிகள் யாவும் சேர்த்தெழுதும் கதையானேன்
ஓடி ஒளிந்து கொண்டு
ஓய்வெடுத்து இளைப்பாறி
ஒதுங்கி சென்றாலும்
ஒருதலைப் படுத்தும் பாடு
உயர் எறிய ஆசை மலரும்
பிறர் வாழ நான் செத்து
பிறவி நாட்கள் கடப்பெத்தாம்
யான் செய்த பாவமின்றி
என்ன பதில் எனக்கு கூற.?
சுற்றி இருக்கும் யாவுரையும்
சுழல் போல் இழுத்து வந்து
சுடுகாடு சேர்ப்பேனோ என
சூழும் பாயத்தை யார் அறிவார்
பிரிந்து சென்றவர் செய்தி
எல்லாம் அனுப்பி வைத்தால்
யாமும் அறிவேன்,
அடுத்த நாள் வருவதையே
அணையளவு தடுக்க ஆசை.
யாரிடம் சொல்லி அழ ,இழப்பை
யானே வந்து கொலைச் செய்தால்.?
கூட்டம் போல் நாடகம் ஆட
கொஞ்சம் கூட மசியாத மனம்.
நீங்காதே நீயே செல்,
போகதே துளைந்து வா
வேண்டாமே விரைந்து போ
செத்தொழி மனமே சிதைந்துடு
தீர்வு இல்லை என் தோழி.
Comments
Post a Comment