வலி
யாரிடமும் சொல்ல இயலாத
ரணங்கள் யாவையும்
தூக்கி தெளித்தெரிய
இடம் தேடுக்கிறேன்.
ஏதேதோ எண்ணம் படற
எங்கே செல்கிறேன் என்றே
அறியாமல், கதறி அழும்
குழந்தை ஆகிறேன்
சில நேரம் பிரிய மனம்
சில நேரம் கருகும் வனம்
வாழ்க்கை அறை கதவுகளின்
சாவிகளை மட்டும் துலைத்துவிட்டேன்
எப்பேர்ப்பட்ட பிறவி எனது
எதைஎதையோ இழந்து வந்து
தாய் சென்று தம்பி சென்று
இடிப்போல் அவள் செய்தி சென்று
அனைத்தையும் தாங்கி நிற்கும் நிலம் ஆகிறேன்
ஓடி ஒளிந்து கொண்டு
பெயர் பாஷை தெரியது
பிணம் போல் வாழ ஆசை வளர்கிறது
வலி அவ்வாறு.
ஏதுமே அமையவில்லை
என்ன வாழ்க்கை என்ற எண்ணம் நிறைக்கிறது
யாவருமே எனதில்லை
யாருக்குமே நானில்லை
என்பதே வழி ஆகிறது.
காதலித்த அனைத்துமே
காலில முள் போல் குத்துக்கிறது
என்னடா வினை
சாவை நோக்கி போகும் எனக்கு
சந்தனக் கட்டைப் போல் மனம் எதற்கு.?
Na onnum sollala thambi
ReplyDeleteசண்முகா ரெடிமெட்ஸ் கதையை வாசித்து விமர்சனம் கூற இயலுமா.?
Delete