மௌனமிடம் கேள்வி.

கல் உடைத்தேன்
மண் சுமந்தேன்
கரங்கள் கூப்பி வணங்கி
கடவுளிடயே வரம் கேட்டு வைத்தேன்
காதலென்ன மலை எடையாய்
என்ன கிண்டல் செய்த பொழுது போக
பால் இருகி நோய் ஆக
பற்று வந்து உடல் இழைத்தேன்
கண் துறந்து செவி வைத்து
சிலையினிலே மலை வரைந்து
இடை அடைந்தேன்.
இருந்தும் பெண் ஒன்று நேரில் கண்டு
பிதற்றி நின்று வாய் அடைய
சிதறிய கற்கள் யாவும் என்னை
பார்த்து சிரிப்பொலிய
வெக்கம் வந்து குனிந்து கொண்டேன்.

நிலா வெட்டி இரண்டாக்கி
நிதானமாக பட்டி பார்த்து 
எங்கு வைத்தால் எவனும் சாவன் என்று
கண் என வைத்து என் கதையை முடித்தான்.

காதில், தங்கமிரண்டு சிக்கி நிற்க
கழுதின் வலைவில் கதைகள் எழுத
கண்ணம் இரண்டில் வண்ணம் நிறைய
உன் உதட்டில் மட்டும் எனது பார்வை.

வந்து வந்து சென்று போகும்
பட்டம் அடிக்கும் பூச்சி அவையும்
உம்மை தேடும் மாயம் என்ன..?
ஒற்று தேகம் தேன் படிவம்.

உம் விட்டின் வாசல் கண்டு 
விந்தை அறிந்தேன்
பறவை கூட்டம் திண்ணையில் அமர
திணி நீதான் என எனது எண்ணம்.

காலை கூந்தல் துவற்றும் அழகில்
தோற்று போகும் கவிதை யாவும்
தூரப் பார்வை ஒன்று போதும்
துணிகள் எடுக்கையில் தொலைவேன் நானும்.

தாவணி போற்றி தனித்து நின்றாள்
தயக்கம் வைத்து ஓரம் பார்த்தேன்.
தயக்கம் தவிர்த்து தலையை நிமிர்த்தையில்
தரையை மோதும் பாதைப் பார்த்தேன்.

காற்றில் தவழும்  இடுப்பு மடிப்பு - இமை
கண்டால் இதயம் நிற்கும்,
படிந்து செல்லும் வேர்வைக் கூட
உடைத் தொடாமல் இடையைத் தேடும்.

உன்னுடன் தோழி உருவம் பெற்று
கைத்தொட்டு நடக்க ஆசை
பெண்ணுடன் ஏனோ பெருந்தொற்று ஏற்று
பெருங்கடல் கடக்க போதாது என் மீசை.

பஞ்சு போல் நியும் பறந்து விரிய
நெஞ்சம் கைரெண்டு பிழவுவது பாரீர்
கொஞ்சம் நீயும் வந்து  வார்த்தை சொல்ல
கொடுப்பேன் நானும் இமைஇடைஉடல்.

வேறோருவரோடு நின் சிரித்து பேசினால்
வேறின்றி விழும் மரம் ஆவேனோ
சரிந்து விழும் மணல்கள் இடையே
பூக்கள் வைக்கும் செடி ஆவேனோ...

சாயந்து சாய்ந்து தரையைத் தட்டி
மேல் கீழ் பார்த்து நெஞ்சைக் கொட்டி
வேதனை அடையும் வேதம் தான் என்ன..

விரகு போல் எறிய மனம்
சிறகு போல் தழிய
வேர் பெண்ணிடம் இல்லாத கற்பனையை
உன்னிடம் கண்டேனோ.
ஏனோ யாரும் சொல்லவில்லை.
விடை தெரிந்தவள் மைனம் தான் 
சொல்லவேண்டும்.

                           - ச.வி. ஆகாஷ்

































Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்