முடி

மதிய உணவு இடைவேலையில்
அவளை அழைத்தேன்.

“என்ன..?" என்றாள் கண்டிக்கும் குரலில்.

உணவு இன்றும் சுவைத் தூக்குகிறதே, என்றேன்.

மறுப்பக்கம் சிரித்துக் கொண்டே,
இன்னிக்குமா
முடி இருக்கு ,என்றாள்.

ஆம் முத்தம் கொடு என்றேன்.
கள்ளி ஏமாற்றுகிறாள் போல,
முத்ததின் சத்தமே கேட்கவில்லை.

இருவருக்குள் ஒப்பந்தம்.
முடியிருந்தால் முத்தம் தர வேண்டும் என்று.
வேண்டுமென்று செய்கிறாளா,
எதார்த்தமாக நடக்கிறதா என்று தெரியவில்லை. 
இதுவரை இந்த முடியிருக்கும் உணவிற்கு
முடிவே இல்லை.


Comments

Post a Comment

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்