ஆடை

வெள்ளை நிற சுடிதார் அணிந்து வந்து எப்பிடி இருக்கிறது என்று கேட்டாள்.
நன்றாக உள்ளது என்றேன்.

கருப்பு நிறம் அணிந்தாள்.
மீண்டும் அதே பதில் அளித்தேன்.

சிவப்பு, பச்சை என வண்ணங்கள் மாறினாள்.
என் பதில் மாறவில்லை.

எல்லாமே எப்பிடி நல்லா இருக்கும்.. ஏதாவது குறைச்சல் இருக்கும் என்றாள்.

தேய்பிறை வளர்பிறை எல்லாம் நிலவின் அழகை குறைத்திடுமா.
என்றேன்.

அவள் சிரிக்க
நான் சிதைந்தேன்.


Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்