மார்ப்புண்டு மறவாதீர்.

கன்னிவத்தான்கோட்டையில் இருந்து புறநகர்
செல்லும் பாதையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே தான் உள்ளது அந்த தள்ளுவண்டி கடை. அரசின் புளியமரங்கள்
உதவி தர, நல்ல நிழல் படைத்த இடம். மூன்று பக்கம் வழிப்பிரிந்து சாலை ஓடும். பள்ளி, வங்கி, காவல் வளாகம், பூக்கடை என நல்ல கடைகள் நிறைந்த தெருக்களும்,வீடுகளும், அடுக்குமாடியில் வாடகை வாசமும் தூக்கும் பகுதி அது. பச்சை விளக்கு எறிய தொடங்கினால்  அடுப்பும் எறிய தொடங்கும். மல்லிகை பூ போல இட்லி என்பார்களே, ஆம் உண்மையில்
ஈஸ்ட் மாவில் நாட்டியம் ஆடுவதால் அவ்வாறே இருக்கும். வீட்டில் மூன்று என்போர் இங்கே ஐந்து என்பர், ஐந்து என்போர் பத்து என்பர். பசி ஆற்றா படி உணவு அது. ருசி தேனைத் தோற்கடிக்கும்,
தோசை நாவிடம் திசை கேட்கும். துணியில் மாவு ஒட்டவே கூடாது என்பதற்க்காக மல்லு துணியை இருபது ரூபாய் தையல் காரரிடம் கொடுத்து சென்ற வாரம் தான் புதிப்பித்தாள் செல்லம்மா. கணவர் மின்சாரம், ஒரு ஆட்டோ ஓட்டுநர், அவர் பிறந்தபோது தான் அவரது ஊருக்கு மின்சாரம் வந்ததாம், எனவே அதுவே பெயர் ஆயிற்று. அவர்களுக்கு ஒரு பையன் கதிர்வேல், ஒரு பெண் தாமரை. கதிர்வேலும், தாமரையும் பள்ளி முடித்து, நேரம் தவறாது தாயுடன் வேலைக்கு வந்துவிடுவர். கண்ணை 
கசக்கி எடுக்கும் அந்த விளக்கின் வெளிச்சத்தில், நான்கு, ஐந்து நாற்காலிகள் தான் இருக்கும், வண்டியில் இட்லி பானையும், பக்கத்தில் ஓர் கேஸ் அடுப்பை வைத்து தோசை, ஆம்லெட் என்று சுட தனி, தனி கல்லும் இருக்கும். வண்டியின் முன் அங்காலபரமேஸ்வரி துணை என்று எழுதி, 
கீழே மின்சாரம் இட்லி கடை தொடர,
உணவு பட்டியல் ஒட்டி இருக்கும். பல நேரங்களில் அந்த விளக்கை சுற்றி ரங்கம் ஆட ஈசல் வளம் வரும்,
அது உணவில் விழுவதை தடுக்கவே,
ஓர் போரே நடத்துவாள்,
செல்லம்மா.
மரத்தின் பின் நிலத்தான் யாரோ மகராசன்
என்பதால் கைகழுவி தண்ணீர் செல்வதை 
அவர் கண்டுக் கொள்ளவில்லை. நான்கு மணி நேர போராட்டத்தில் தான் குடும்ப சக்கரம் ஊர்க்கிறது. ஆட்டோவிற்கு லோன்,
கடன் வட்டி, பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, தாமரை கல்யாணம் என செல்லாமவும் ,மின்சாரமும் சுமப்பது அதீத இடைத் தான். கதிரும் பொருப்பேற்று நடந்து வரும் பருவத் தேர்வுகளை நன்றாகவே செயல்பட்டான்.தேர்வுகள், சிறப்பு வகுப்புகள் எனினும் வேலைக்கு வருவதை என்றும் அண்ணனும் தங்கையும் நிறுத்துவது இல்லை.ஆறு மணி ஆனால் போதும்
ஆவி அகிலம் பறக்க, இட்லியை தொட்டு கொடுத்து, தட்டிலே எடுத்து வைத்தால் நான், நீ, என தட்டுகள் மள்ளுக்கு நிற்கும். வேறு சில தள்ளுவண்டி கடைகள் பக்கத்தில் இருந்தும் அந்த கடையில் கூட்டம் கூடுவது ருசிக்கு தான் என்றே நினைந்திருந்தேன், அந்த நாள் வரும் வரை.

மின்சாரமும் அன்பழகனும் குழந்தைப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். அவர்கள் ஊரில் உள்ள ஒரே அடுக்கு மாடி குடியிருப்பின் செல்ல பேரன் கடித்து எரிந்த செவ்வாழைப் பழத்தை துடைத்து உண்டது முதல், கல்யாணத்தில் திருட்டு தனமாக உண்ட போது எழுப்பி விரட்டி அடிக்கப்பட்டவரை , வருமையின் பல வண்ணங்களில் இருவரும் சேர்ந்தே கழித்தனர். மின்சாரமும் சரி, அன்பழகனும் சரி, தன் துணைவியிடம் மறைப்பதுண்டு எனினும் இருவருக்கு இடையில் எந்த  ஒரு ஒழிவு மறைவு இருக்காது, அது குடும்ப பிரச்சினை ஆயினும் சரி, வேறு எதுவாயினும் சரி, ஒரு முறை கலந்து பேசி விடுவர். அவர்கள் ஊரில் இருந்து மாதம் ஒரு முறை ரயில் ஏறி, சேலம் ரயில் நிலையம் இறங்கி, நால்ரோட்டில் உள்ள லட்சிமி கடையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது அவர்கள் வழக்கம். சிறு வயதில் பிடித்த ஐஸ்கிரீம் காதல் ஐம்பதிலும் தொடர்ந்தது. அன்பழகன் தையல் கடை உரிமையாளன். அங்கு வந்து மின்சாரம் அவரிடம் மணி கணக்கில் பேசுவதும் உண்டு. அவன் மகளான தாமரையை அன்பழகனின் ஒரே மகனான செல்வத்திற்கு திருமணம் செய்து வைக்க அவனுக்கு ஆசை, அன்பழகனும் அதை ஆதரிப்பார். சின்ன வயது தான் என்பதால் இதை பெரிதாக பேசிக்கொள்வதில்லை.


ஒரு நாள் மின்சாரம் அன்பழகனை வாடிய முகத்துடன் பார்க்க வந்தார். செல்வம் உள்ளே  பள்ளி முடித்து வந்திருந்தான். நிலையைப் புரிந்த அன்பழகன் செல்வத்தை வீட்டிற்கு போய் படி, அப்பா இரவு வருகிறேன் என அனுப்பி வைத்தார். அன்பழகன் தான் மிதித்து கொண்டிருந்த தையல் வண்டியை நிறுத்தி, பக்கத்தில் இருந்த டீ கடையில் இரண்டு போண்டா வாங்கி விட்டு,  சட்டரை சாத்தினார்.
என்னடா ..? என்னாச்சி என்று வினாவ..
மின்சாரம் கண்ணீர் சிந்தினார்..
என்னடா..ஏன் டா அழுகுறா என்ன ஆச்சி சொல்லுடா என்றார். எட்டு மாதம் தான்டா ஆச்சி அந்த கட வெச்சி, நல்ல லாபம், உண்மையா கஷ்டத்த பாதி போக்குன சாமிடா அந்த தள்ளுவண்டி, என் பொண்டாட்டி என் கிட்ட சொல்றப்ப கூட நான் வேணா ஓடாது, 
நமக்கு எதுக்கு கஷ்டம்னு சொன்னே ஆன நான் நினைச்சதவிட நல்ல லாபம் கிடச்சுது,
நல்லா தாண்டா போய்டு இருந்துச்சு...

சரிடா அதான் முதல்லையே சொன்னையே..
ஏன்டா இப்ப அதுல என்ன பிரச்சன.? என்றார் அன்பழகன்.

நான் அவள சமயல் பாத்திரத்துடன் அந்த இடத்தில் இறக்கிட்டு , திரும்பி வியாபாரம் முடிஞ்சவாட்டி தான் வருவேன்.அது வரைக்கும் அவ, குழந்தைங்க பாத்துப்பாங்க, ஆன
அவ எங்கிட்ட சில விஷயம் சொன்னா...
என்னால அவள இனி இந்த கடப்போடுனு சொல்ல முடியல என்றார்.

என்ன சொன்னாங்க..என்றார் அன்பழகன்.

கடைக்கு வரவன் சிலர் தகாத வார்த்தைகளால் பேசறதாவும், டபுள் மீனிங்ல பேசறதாவும் சொன்ன.. இரண்டு இட்லி பெருசா ஊத்து, இரண்டு இட்லி சின்னாத ஊத்து.. குழி ஒன்னுல பெருசா இருக்கட்டும், ஒன்னுல  சிறுசா இருக்கட்டும், கட்ட நல்லா புதுசா இருக்கே எவ்வளவு..? பூ மாறி இட்லி இருக்குமா..இப்படி அவளையும் குழந்தையையும் பேசறாங்கடா என்றார்.
இத அவ இத்தன நாளா சொல்லவே இல்ல ஏன்டினு கேட்ட... அப்புறம் எப்படி பீஸ் கட்றதுனு சொல்றா..ரெண்டு நாய் சொல்லுதுனு இதெல்லாம் நிறுத்திடு என்னனு சொல்ற.., எனக்கு கோபம் வந்து அடிச்சிடேன். அடுத்த நாளும் அவ கடப்போட்டே ஆவேனு பிடிவாதம், நான் எவ்வளவு சொல்லியும் கேக்கல..சரி போடு, கதிர மட்டும் வெச்சிக்கோ, தாமரைய அப்படியே வீட்டுக்கு போக சொல்லுனு சொல்லிட்டேன். ஆனா அதுலையும் ஒரு பிரச்சனை.. இரண்டு நாளா இந்த பிள்ளை போகாதத பாத்து..எங்க சின்ன பொண்ண காணோம்னு சிலர் கேக்க அவ வராமாட்டனு இவ சொல்ல..அந்த நாள்ல இருந்து வியாபாரமே அதிகம் இல்லையாம், வேணும்னே பக்கத்து கடையிலே சாப்பிட்டு சின்ன இட்லி இல்லைல இனி யாரும் வராமாட்டோம்னு கிண்டலா சொல்லிட்டு போறாங்கலாம்.. நான் என்ன டா செய்ய என கதறினார் மின்சாரம்.

யாரு, என்னனு தெரியுமாடா..எவன்னு சொல்லுடா வாய கிழிப்போம்..அந்த இடத்தில வேலை செய்றவனா..இல்ல அந்த வாடகை வீடு லைன்ல குடி இருக்கறவங்கலா...
சொல்லுடா..என்றார் அன்பழகன்.

யாருனு நான் சொல்ல..? எவன் எவனோ வரான் போரான்..எவனு கைக்காட்ட நானும் ,

இவக்கிட்ட அப்பிடி ஒரு வேல தேவயில்லனு சொன்னாலும் முடியாது, நான் ஒன்னும் படுக்க போகல..நாலு பேரு இப்பிடி பேசறதுக்காக நான் என் கடைய நிறுத்த மாட்டேன்..நாளையில இருந்து தாமரையும் கடைக்கு வரட்டும், மூடி இருக்கறத பாத்தா என்னனு என்ன எதித்து பேசிட்டு இருந்தா..அப்ப கதிர் வீட்ல இல்ல..தாமர ஏன்கிட்ட வந்து அப்பா இதுல என்ன இருக்கு.. இதெல்லாம் நாங்க பழகிட்டோம்.. பஸ்ல இருந்து பள்ளிக்கூடம் வர இந்த மாறி வார்த்தைய கேட்காம கடந்த பெண்களே இல்ல..இது என்ன யாரோ ஒருவன் பேசறது எல்லாம் ஏன் உடம்ப பாதிக்காது, அது வழுதான் படுத்தும் கவல படாதீங்க நான் போறேனு சொல்லிச்சு... நான் செத்துப் போய்டேன் டா. அந்த குழந்த இப்பிடி சொன்ன உடனே.. என்றார் மின்சாரம்.


அன்பழகன் ஆழ்ந்து உறைய உன் மகள் தான் என் மருமகள்..உன் மகளை நீ எப்பிடி வளர்க்க வேண்டுமோ அப்பிடி வளர்த்து இருக்கடா..அழாதடா நாயே...நீ பெரும படனும்.
பயப்படாத அந்த இரண்டு பிள்ளைங்கலும் உலகத்த ஆழ பிறந்தவங்க பயப்படாத...
என்றார் அன்பழகன் மகிழ்ச்சியுடன்.


ஆண் எனும் மடவர் கூட்டமே..!
உன் தாயுக்கும் மார்ப்புண்டு,
தங்கைக்கும் மார்ப்புண்டு,
நீ தாலிக்கட்டும் பெண்ணிற்கும் மார்ப்புண்டு,
நீ தாலாட்டும் குழந்தைக்கும் மார்ப்புண்டு..

மறவாதீர். 









 

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்