பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்று 22.6.2021. இரவு ஏழரை மணி வரை இன்று அவள் பிறந்தநாள்  என்று எனக்கு தெரியாது. எப்போதும் போல் தான் அன்றும் வேலை முடிந்து, 
ஆறாரை மணிக்கெல்லாம் எங்கள் வாடகை வீட்டின் திண்ணை மேல் அமர்ந்து, வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.  எங்கள் வீட்டின் நேர் எதிரில் கிழக்கை பார்த்து அவள் வீடு இருக்கும். நான்கு அறைக் கொண்ட வீடு என நினைக்கிறேன். அறைகளின் மேல் மின் கம்பிகள் இணைக்க விட்டிருக்கும் துழைகள் கண்டு கணக்கிட்டேன். மேற்கு பக்கம் மட்டும்  மூன்று சன்னல்கள் கொண்ட லைன் வீடு அது. எங்கள் வாசலுக்கும், அவள் அறைக்கும் நேர் எதிர். என் அறையில் இருந்து சில முறை அவள் தலை வாறுவதை ரசித்து இருக்கிறேன். முற்றிலும் மூடி தான் இருக்கும், சாமி சில சமயங்களில் தான் தரிசனம் தரும். எப்போதாவது தான் அவள் தெருவை விடுத்து , எங்கள் தெருவிற்கு வருவாள், ஆனால் துணி துவைக்கும் கல்லும், அதை துவற்ற கொடியும் மேற்கு திசையில் இருப்பதால் , மேற்கில் சூரியன் இரண்டு அல்லது  மூன்று நாளைக்கு ஒருமுறை உதிக்கும். அவள் கொடியிலே துணிகளை போடும் போது, எனக்குள் புயல் எச்சரிக்கை கொடி ஏறும். உடையின் ஓரம் ஒரு பார்வை பார்ப்பாள், அய்யோ.. என்னவென்று சொல்ல நடுங்கிவிடுவேன். அவளும் என்னை பார்க்கிறாள் என்ற எண்ணம் எனக்குள், பார்க்கிறானா? என்று பார்க்கிறாளா..? இல்லை பார்க்க வேண்டும் என்று பார்க்கிறளா..
ஆராய்ச்சி எதற்கு ..?
அழகை மட்டும் ரசிப்பேன்.
சமயலறை சன்னல் சில சமயங்களில் திறக்க படும், நெடிக்காக அவர்கள் திறக்கும் நோடிக்காக காத்த காலமும் உண்டு. புத்தக பிரியன் நான் , நடந்த கொண்டே படிப்பேன், சன்னல் திறந்து விட்டால் பக்கம் நகறாது, பார்வைக்காக மட்டும் ஒரு ஓர பார்வை பார்ப்பேன். அவளை பார்த்தால் படிக்க முடியவில்லை என்பதற்காக மாடி மீது செல்வதும் உண்டு. இரவு மட்டும் கொஞ்சம் கடினமாகி விடும். ஏனோ தெரியவில்லை, அவள் அங்கு இல்லை என்று என் மனதை ஏமாற்றி படிப்பில் கவனம் செலுத்துவேன்.  


முதல் முதலில் அவள் என்னிடம் பேசியது, அவள் தெருவில் பாம்பு ஒன்று புகுந்த போது எங்களை அழைத்து ஒரு அக்கா அடிக்க சொன்னார். நான் பெரியதா? சிறியதா..? என கேட்டேன். சிறியது என்றார். எனவே நானும் என் சக நண்பர்களும் சென்றோம். பாம்பு என் உயரம் இருக்கும், நல்ல பாம்பு , நன்றாக வளர்ந்து இருந்தது. ஒரு சிறிய சந்தில் முனையில் இருந்ததால் அடிக்க முடியாது என்றேன். அதை வெட்ட வெளியில் தான் அடிக்க முடியும், நல்ல கட்டையாக கொடுங்கள் என்றேன். எந்த கட்டையும் இல்லை. பாம்பை அடிக்க பி.வி.சி பைப்பை கொடுத்தார்கள். சிரித்து கொண்டே இதை வைத்து கரப்பாண் கூட அடிக்க முடியாது என்றேன். ஏதோ ஒரு சிறுமி ப்ரியா அம்மா என்றது. ப்ரியா அவள் பெயர். உள்ளே ஒரு மகிழ்ச்சி, பாம்பிற்கு நன்றி சொன்னேன். கடனாக அடிக்காமல் விட்டு விட வைத்தேன். தீயணைப்பு வண்டிக்கு தொடர்பு கொண்டால் பிடித்து செல்வார்கள் என்றேன். “இல்லையே, வனத்துறைக்கு தானே தொடர்பு கொள்ள வேண்டும் என்றாள் தேவதை". ஆம் அவள் தான். பதில் அளித்தேன். பேசியதே எனக்கு பெரு மகிழ்ச்சியாய் இருந்தது.
ஆசை யாரை விட்டது.


அமர்ந்து கொண்டு இருக்கையில், நம்புங்கள் மக்களே..பூவும் ஆடை அணியும்,
வெள்ளை நிற பூப்போட்ட சுடிதார் அது. காஜல் வைத்த கண்கள், எனக்குள்ளே அலை அடித்தது. அவள் கண்ணை கண்கள் பார்க்கும் நொடி இடி தான் என்றும் உள்ளே. 
அவள் கண்கள் மிகவும் அழகாக இருக்கிறது என்று அவளிடம் சொல்ல தைரியம் அற்றவன் நான். அப்போதும் அறியவில்லை அவள் பிறந்தநாள் இன்று என்று. குளித்து விட்டு எப்போதும் படிப்பது வழக்கம்.
அன்று கார்ல் மார்க்சின் மூலதனம் புத்தகத்தின் முதல் பாகம் படிக்க இருந்தது. ஆனால் அவள் சக நண்பர்களும் உறவினர்களும், அந்த தெரு மக்களும் யாருக்கோ பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர் என்பதை உணர்ந்தேன். ஒருவர் பிறந்தநாள் கேக்கை வாங்கி கொண்டு செல்வதையும், அவள் வீட்டிற்கு தெரியாமல் அதை எடுத்து செல்வதையும் கண்ட போதும் எனக்கு நம்பிக்கை இல்லை, இன்று அவள் பிறந்தநாள் என்று. அவளது அம்மா நீண்ட நேரம் எங்கள் தெருவில் நின்று அவள் வருகைக்காக காத்து கொண்டு இருந்தனர்.. அப்போதும் இந்த மடையனுக்கு தோன்றவில்லை. பின் புயல் எங்கள் வாசலை கடந்தது. பிறந்தநாள் கேக்கை வெட்டும் போது, சிறார்கள் அனைவரும் “ ஹிப்பி பர்த்டே ப்ரியா கா" என கோஷம் எழுப்ப
விழுந்தே விட்டேன் நான். என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. எப்படி யாவது வாழ்த்து சொல்ல வேண்டும் எதையாவது அவளுக்கு பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன். என் அறைக்குள் சென்றேன் புத்தகங்களை
 புரட்டினேன். அனைத்தும் படித்தவை , உள்ளே கிறுக்கி இருக்கும். அருண் சவுரி எழுதிய “ Falling over Backwards" புத்தகம் மட்டும் தான் நான் கிறுக்க வில்லை, அதை பாதி பாதியாக படித்ததால் முதல் பக்கத்தில் மட்டும் தான் பெயர் இருக்கும், கிழித்து விடலாம் என யோசித்தேன். ஆனால் பிறந்தநாளுக்கு எப்படி இந்த புத்தகத்தை கொடுப்பது, அப்படி கொடுத்தால் அவளது பெற்றோர் என்ன நினைப்பர்.?
அந்த வீதி என்ன நினைக்கும்..?
என் வீதி என்ன நினைக்கும்..? என்ற கேள்விகள் எனக்குள்ளே.
உண்மை தான் வாடகைக்கு இருந்து விதி செய்யும் நான், இவ்வாறு செய்வது சரியில்லை தான். ஆனால் இதில் என்ன இருக்கிறது என்ற நியாயம் மூளையை மனது வென்றது. புத்தகத்தை எடுத்தேன், முதல் பக்கத்தை கிழித்தேன். பரிசு தயார், வாழ்த்த நான் தயார்.
ஆனால் அவளிடம் எப்படி சொல்வது என்ற தயக்கம். பாம்பை அடிக்க செல்லும் போது பயம் இல்லை..ஒரு பாடலின் வரிகள் என்னுள்ளே ஓடியது..
“ அந்த கடவுளை விடவும் தைரியம் கொண்டவன் பூமியில் உள்ளான் எவன்..?
பெண் கண்களைப் பார்த்து காதலை சொல்லும் தைரியம் கொண்டவன் அவன்". 
இது காதல் அல்ல, பிறந்தநாள் வாழ்த்து தான். எனினும் என்னால் முடியவில்லை.மணியைப் பார்த்தேன் பத்து. வருவாளா.? 
தெரியவில்லை. அவளது வீட்டின் முகப்பு விளக்கு என்றும் பதினொரு மணி வரை எறியும், அன்று பத்து கெல்லாம் அணைந்தது. முதல் அறையில் விளக்கு எறிகிறதா..என்று அந்த துளைகள் மூலம் தெரியும். இல்லை அணைந்தது. அவள் அறை விளக்கு மட்டும் எறிவதும், சமயலறை விளக்கு எறிவதும் சன்னல் வழி தெரியும். ஆம் எறிந்தது வாய்ப்பிருக்கிறது என்று நம்பினேன். 


நான் நாத்திகன், வேண்டாத தெய்வம் இல்லை. என் புத்தகத்தின் கார்ல் மார்க்சு என்னை உற்று பார்த்து கொண்டிருந்தார். காற்றின் ஓசை என் காதை கிழித்தது.
பூக்கள் தூங்குவதை கூட உணர்ந்தேன். மணி மெல்ல நகர்ந்தது. பத்தரை , பதினொன்று நான் அமர்ந்த இடத்தை விட்டு சிறிதும் நகரவில்லை. இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது , வெல்வேன் என நம்பினேன். சமயல் அறை விளக்கு அணைந்து, அவளது அறை விளக்கும் அணைந்து. எதையோ பெரிதாக இழந்தது போல் எண்ணம். எனினும் நான் நகர வில்லை. இருபது நிமிடம்.
கவிதைகள் எனக்குள்ளே பெருக்கெடுத்தன..எழுத ஆசை, உள்ளே சென்று பேனாவை எடுக்கும் நேரம் கவிதையை பார்க்க முடியாமல் சென்றுவிட்டால், நகரவில்லை நான்..ஏதோ ஒரு சின்ன நம்பிக்கை என்னை தடுத்தது. 


வளர் பிறை நாள் அன்று , வெளிச்சம் விண்ணை பிழந்தது.
இரவில் வானவில் வந்தாள் குற்றமா என்ன..? வானவில் மேல் தென்றல் ஏறினால் குற்றமா என்ன.? நிலவை ஏன் அனைவரும் வானில் மட்டும் தேடிகிறீர்கள்..? அவள் தெருவில் நடக்கிறாள்.
அந்த கண்களை பார்த்தேன். என்னை அறியாமல் கை அசைத்தேன். சைகையில் பிறந்தநாளா என்று கேட்டேன். 
நம்புங்கள் மக்கா..! தலையைத்தான் ஆட்டினால்
புகம்பத்தை உணர்நதேன்.
வேக வேகமாக என்னிடம் இருந்த மார்கர் பேனவை எடுத்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று காகிதத்தில் கிறுக்கினேன். அவளிடம் காண்பித்தேன்,
தலையை ஆட்டி சென்று விட்டாள்.. புத்தகத்தை தர முடியவில்லை எனினும் என் கால்கள் தரையில் இல்லாததை உணர்ந்தேன்..
தவங்கள் பழிக்க நீண்ட காலம் தேவையில்லை, ஐந்து மணி நேரம் போதும் தான் போலும்,
மறு நாள் எச்சரிக்கை கொடி ஏற்றதிற்கு தயார் ஆனேன். 

மார்க்ஸின் புத்தகத்தின் வரி ஒன்று காற்றின்  அசைவால் தென்பட்டது. “ Reason has always existed but not in a reasonable form".
நான் அவளிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லாமல் போனதற்கும், பரிசு பொருளை கொடுக்காமல் போனதற்கும் சொல்லும் காரணிகள்..?
உண்மையில் காரணிகள் தானா..?


When Love Begins Logic Ends.






Comments

  1. தயவு செய்து கதையாக படிக்கவும் 🙏.

    ReplyDelete
  2. Story 🤭🤭🤭🤭

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்