Azadi
எனது பள்ளி பருவத்தில், என் வரலாறு ஆசிரியர் சொன்ன
Imperialism, colonisation, Communism, Fascism, Buddhism
போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து படித்ததே இல்லை. அந்த மதிப்பெண் மட்டும் தான் ஒரே நோக்கம், அவர் சொன்ன பாடங்களும் அவ்வாரே, நாள் போக்கில் மறைந்தது தான். சிறு வயதில் இருந்த இட்லரை பற்றி அதிகம் படித்தவன் நான். இன்னும் சொல்ல போனால் என் ஆரம்ப புள்ளியே விகடன் இதழ் வெளியிட்ட இட்லர் புத்தகத்தை படித்தது தான். அதில் இருந்தே இட்லிரின் மீது இணைப்பிரிய ஓர் பந்தம் எனக்கு.அவர் செய்த கொலைகளில் ஏதோ நியாயம் இருப்பது போல் தான் இன்றும் வாதாடுவேன். என்றும் Fascism மின் எதிரி என்றாலும் இட்லரை ஏதோ முளையில் நினைப்பது தவறு தானே. நமது கல்லூரியில் கோகுல் அண்ணா கொடுத்த இட்லரின் வதைமுகாம்கள் என்ற நூலை படித்தேன், எத்தனை கொலைகள், எப்படி எல்லாம் கொலைகள் செய்ய பட்டு இருக்கின்றன , மனித மிருகம் கூட இப்படி செய்து தானே, எனினும் இட்லரின் காதலில் சிறிதும் அடர்த்தி குறைதல் இல்லை. Steven Spielberg எனது ஆசைககுரிய இயக்குநர் இயக்கி,Liam Neeson, Kingslay போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த Schilnders list படம் பார்த்தேன் எனினும் எனக்கு எதுவும் தோன்றவில்லை.
எத்தனையோ முறை என் நணபன் நரேஷ்“ நீ எப்படி ஒரு கம்யூனிஸ்ட் டா இருந்து இட்லர ஆதரிக்கர" என்று கேள்வி எழுப்பிய போது என்னிடம் தெளிவான பதில் இல்லை, இல்லை எனக்கு தெரியவில்லை. நான் பார்த்து , படித்தது , கேட்டது எல்லாம் திரையிலும் புத்தகங்களிலும் செய்திகளிலும் இருந்ததால் என்னவோ அப்படி ஒன்றும் பெரிதாக நான் அளடி கொள்ளவில்லை.
ஆனால் நிலைமை மாறியது.
என் கண் முன்னே மக்கள் கொள்ள படுகிறார்கள், இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கூட அதே போல் சாதி, மதம் , அரசியல், Colonisation, Imperalism என்று எதுவும் மாறவில்லை என்ற போது தான் நாம் எவ்வளவு இழிவான மனநிலையில் இருக்கிறோம் என்று அறிகிறேன். அருந்ததி ராய் அவர்கள் எழுதிய இந்த “Azadi" என்ற புத்தகம் உண்மையில்
இந்த உலகத்தை சுற்றி பார்க்க வைக்கும். நாம் எந்த நிலையில் இருக்கிறோம், நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் காற்று தீயை எப்போது அணைக்க போகிறோம் , என்ற ஏரளமான கேள்விகள் மனதில். உண்மையில் பயம் தான் ஏற்படுகிறது. இதை படிக்கும் போது இட்லரின் ஜெர்மனி எப்படி இருக்கும் என்பது போல் எனக்கு தோன்றியது. ஒரு யுதராக. நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற அறிவு பலரிடம் இல்லை, பலர் இதை பற்றி கவலைப்படுவதில்லை.என்று ஆசிரியரே வேதனை அடைகிறார்.
நீங்கள் வெல்ல முடியாத போர் இது, ஆனால் நீங்கள் சண்டையை நிறுத்த முடியாது.
இந்து ராஷ்டிரா எனும் பேர் அரக்கன் எப்படி நம்மை உண்டு கொண்டு இருக்கிறான் என்பது முதல் கடைக்கோடி மலை வாழ் மக்களின் மனதையும், அழுகை குரலையும் இந்த புத்தகம் பேசும். ஆர்.எஸ்.எஸ் எனும் தீவிரவாத அமைப்பு எப்படி எல்லாம் இந்த நிலத்தின் மக்களை துன்புறுத்திக்கிறது,
எப்படி சிறுபான்மை மக்கள் தங்கள் வாழ்கை வாழ தினம் தினம் போராடி கின்றனர் என்பதையெல்லாம் இந்த புத்தகம் உணர்த்தும். மதம் செய்யும் மாயை, அது எப்படி அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி கொள்கிறார்கள், சாதி, உணவு, உடை, குணம், மொழி , நிலம், காதல் முதல் எப்படி அனைத்துமே அரசியல் ஆக்க படிக்கிறது என்பதையும் காணலாம். நாம் பின்னோக்கி செல்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மோடி ஆட்சி அமைக்கப்பட்டதும் குறைந்து வந்த மத கொலைகள் அதிகம் ஆனது எப்படி, எப்படி வேலையின்மை, உணவு பற்றாக்குறை, பஞ்சம், பசி, ஏழை சதவிகிதம் என அனைத்தும் அதிகரித்தும் மோடி எப்படி 2019 ஆம் ஆண்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கமாக இந்நூலில் தனது வலியை பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.
யாரெல்லாம் எதிர்த்து நிற்கிறார்களோ அவர்களையெல்லாம் Anti indian,
Pakistani, Maoist, என பெயர் சூட்டிடும் அவலம் முதல் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், போரட்ட கலைஞர்கள் என அனைவரும் சிறையில
அடைக்க படுவதும், அவர்களை எதிர்த்து நின்றால் கொலை செய்வதும் எ.கா.பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், நீதிபதி லயா போன்றோரை கொலை செய்த வரை அனைத்தையும் புத்தகம் சொல்லும். ஆசிரியர் தனக்கு வந்த மிரட்டல்கள், விமர்சனச்களையும் இணைத்துள்ளார். நாம் ஓர் வாழ தகாத நிலத்தில் வாழ்கிறோம் என்று எண்ணம் தோன்றும்.
எனினும் சில இடங்களில் முற்போக்கு சிந்தனை உள்ள கட்சிகள் வென்றாலும், ஏன் பி.ஜே.பி யே தோற்றாலும் இந்த போருக்கு முடிவில்லை,
உங்களால் கலங்களைத்தான் வெல்ல முடியும் போரை அல்ல என்கிறார் ஆசிரியர்.
நிச்சயமாக படித்து பாருங்கள்.
2020 ல் வெளிவந்த இந்த நூல் நிச்சயமாக உங்கள் அரசியல் அறிவை விரிவு செய்யும் அல்லது தூண்டும்.
லெலின் சொன்னது போல “ If You don't Interfere in politics, Politics will definitely interfere in U".
Comments
Post a Comment