எழுநூறு ரூபாய்
பேருந்தில் பயணம் என்றாலே பாகற்காய் கடிப்பது போல் எனக்கு. நிறைய சமயங்களில் நான் விரும்புவதில்லை.நண்பணுடன் என்றால் எமனிடம் கூட பேருந்தில் செல்வேன். ஆனால் வேறு யாருடனும் செல்ல மனம் ஏற்பதில்லை. என்ன செய்ய நண்பனில்
உறவு இல்லை, என் உலகமே இருக்கிறது.
அன்றும் அவ்வாறு ஒரு பயணம் தான். இந்த விநாயகர் சதுர்த்தி தினங்களில் எப்படியாவது விடுதி உணவை நாக்குக்கு காட்ட கூடாது என்பது எனது எண்ணம். தாய்யின் சுவை 17 வருடம் ஆண்ட மண்ணில் பஞ்சம் வந்து, பதறி தவிக்கும் மக்கா கூட்டத்தில் நானும் ஒருவன் தான். பல சமயங்களில் ஏதோ கடல் மண்ணில் கிடைக்கும் பலபலக்கும் கற்கள்
போல் தான் இருக்கும் எங்கள் விடுதி இட்லி.
சரியாக ஞாபகம் இல்லை எனினும் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, எனது அறிவியல் ஆசிரியர் ஒருவர் செய்திதாளைக் கொண்டு வந்து இது தான் நிலவின் செயற்கைக்கோள் வரைப்படம் என்று காண்பித்த அந்த படத்தை தான் தோசை என்ற பெயரில் நான்கு முழுங்குவேன். இருக்கட்டும் இன்று அதற்கு பாய் .! பாய்..!
நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஏதோ பாளையம் எனும் முடிவுச்சொல் கொண்ட ஊரில் விநாயகர் கோயில் உண்டு, அனைவருக்கும் உணவு உண்டு என்று அறிந்ததும், ஆம் இன்று உமக்கு வேலை உண்டு என்று சொன்னேன் என் வயிரிடம்.
புறப்பட்டது பேருந்து. பெரியநாய்யகன்பாளையம் என்ற இடத்தில் என் நண்பருடன் நான் ஏறிய போது கூட்ட நெரிசல் , நின்று வந்தோம். ஆனால் போக போக..தீணிவிட்டு இறங்கும் எறும்பு போல
கூட்டம் லேசானது. நான் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தேன்.இது நடப்பது அரிது, என் பக்கதில் எவனும் அமர வில்லை.
ஆம்.வாய்ப்பு அமையவில்லை.அனைவரும் பேருந்தின் இறுதி இருக்கையில் அமர்ந்துவிட்டனார். நான் மட்டும் தனியாக.
அதில் ஒருவன்..மச்சி லக் இருந்த ஒரு பொண்ணு உக்காருதானு பாப்போம் என்றான். அதற்கு நான்..ஆமா..இத்தன சீட் இருக்கு , மாமா எங்கனு என்ன தேடி வருமா..
போடா லூசு என்றேன். பின்னர் கெட்ட வார்த்தைகள் என்னை தேடி வந்தன.எனக்கு கெட்ட வார்த்தைகள் பேச அவ்வளவு பிரியம் எனினும் பேசுவதில்லை.அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.அதை புரிந்துகொள்வது அனுபவித்தில் தான் ஆகும்.ஆனால் அவர்கள் அதிஷ்ட சாதிகள் யார் இருந்தால் எனக்கு என்ன..நான் நானாக இருப்பேன் எனும் பறவை கூட்டத்தில் நான் மட்டும் பறக்கவில்லை. ம்..நேரம் வந்தால் அனைத்தும் மாறும். துடியலூர் வரும்முன் கௌடம்பாளையும் எனும் இடத்தில் பேருந்து நின்றவுடன் அதிர்ச்சி அடைந்தேன் நான்.
ஒரு திருநங்கை என் பக்கத்தில் வந்து அமர,
அங்கே கடைசி இருக்கையில் ஒரே ஆரவாரம் எனினும், அவர்களும் என்னைப்போல் தான்
திருநங்கைகளை மதிப்பவர்கள் தான். சின்ன
கூச்சல் பின்னே அடங்கி , அவர்களுக்குள்ளே
பேசி கொண்டு இருந்தனர். எனக்கோ ஏதோ பதற்றம், நெஞ்சம் அடித்தது, அவள் என்னை பார்த்து "பயப்படாத ஏதும் செய்யமாட்டேன்"
என்றார். அப்படில இல்ல அக்கா..தெரியும்னு
சொன்னேன். அவர்களது குரல் ,ஆம் அது எப்படி அறிவியல் இவ்வளவு அழகாக அமைகிறது, ஆணும், பெண்ணும் கலந்த அக்குரல், சமுதாயத்தில் உடலை விற்பவள்,
நிற்கும் பேருந்துகளில் கைத்தட்டி பிச்சை வாங்குபவளின் குரல் என எனக்கு காட்டியே வளர்த்து வந்த குரல் அது." ம்...என்னடா
படிக்கிற "என்றார் அந்த அக்கா. ம்..பி.எஸ்.சி
அக்கா என்றேன்..ஒ...படி படி என்றாள்.
வேலைக்கு லாம் போய் குடும்பத்த காப்பாத்து என்றாள். வாயில் வெற்றிலைப் போட்டு பேசி
வந்தாள்.நீங்கள் என்ன செய்கீறீர்கள் என்று கேட்டாள் தப்பாக எடுத்து கொள்வாரா
என்ற அச்சம் ஓடியது. எனினும் விடவில்லை.
அக்கா நீங்க படிச்சீங்களா என்றேன்.
சிரித்து கொண்டே..".ஏது படிப்பா..?
காட்டுல வளர பாம்புக்கு , கட்டிள் மெத்த கேக்குமா..ம். ஆறாவது படிச்சேன்..
அப்பன் தெரிஞ்சதும் தூரத்தி விட்டுடான்.
என்றார். எனக்கு காஞ்சனா படம் இமையருகே வந்து போக, அவரை எண்ணி
உண்மையில் மனம் குழைந்தேன்.என் வீட்டில் இருந்து கோவைக்கு அதிகாலை செல்லும் போதோ , அங்கிருந்து என் வீட்டிற்கு வரும் போதோ இவர்களை நான் கடக்காமல் இல்லை. அந்த கைத்தட்டும் சைகை வந்தாலே
என் பின்னிருந்து பர்ஸை எடுத்து சில்லறைகளைத் தேடுவேன். ஐந்து ரூபாய் கொடுத்தால் தப்பாக நினைப்பார்களோ என்று பத்து ரூபாய் தருவதும் உண்டு, சில சமயங்களில் அக்கா , அவ்வளவு தான் கா.
பஸ்க்கு இல்ல என்பதும் உண்டு. ஏன் கா..
என்ன வேலைக்கு போறீங்க..என்று என் வாய் தவறி வார்த்தை வீழ்ந்தது. அவர் காத்த மௌனம் என்னை ஊனம் ஆக்கியது. அவருக்கு வலித்தது என்பதை என் வலி உணர்த்தியது. சாரி கா..என்றேன். "டே..இதுல என்ன ..கேளு சொல்றேன்" என்றார்.
எனினும் எனக்கு மனம் இல்லை. அக்கா வேணாம், நீங்க பட்ற கஷ்டம் எனக்கும் தெரியும், நானும் பாத்து இருக்க என்றேன்.
என்ன பாத்த.? காஞ்சனா படமா..? என்றார்.
காட்டிக்கொடுத்தாயா..? என்றேன் மனதிடம். இல்லக்கா...டே..என்று என்னை நிறுத்தினர்.
சொல்றேன் கேளு..இனியாவது நீங்க நாங்க பட்டற கஷ்டத்த தெரிஞ்சி கோங்க...என்றார்.
நான் செய்வது அறியாது தலை அசைத்தேன்.
எழுநூறுரூபா.. இது தான் என் ஆச..
எழுநூறுரூபாயா..? என்றேன். டே..மூடிட்டு கேளு என்றார். சிரித்துக்கொண்டே ம்..கா என்றேன். நான் படுத்து தான் சம்பாறிக்கனும், எனுக்குனு குடும்ப இல்ல, ஒரு *தியும் இல்ல.. வேற வழியில்லை.
இந்த பிச்சை எடுக்கறது , இதெல்லாம் எனக்கு செட் ஆகாது. என் உடம்ப திண்ண,
காசு கொடுத்துட்டு போ அவ்வளவு தான் வேல. என்றார். அவர் இப்படி சொன்னவுடன்
என் எண்ணம் ஏதோ மாற தொடங்கியது.
உடலை விற்பது கேவலம் அல்ல, ஆனால் இவர் இப்படி சொல்வது , ஏதோ திமிர் எடுத்த
போனியில் உரைத்தவுடன் ஏனோ மனம் காற்றாடி ஆனது. ஆன..இப்ப பழகி போச்சிடா
ஆன முதல அப்படி இல்ல..ஆறாவது படிச்சிட்டு இருந்தப்ப தொரத்தி விட்டான்..அந்த முண்ட மூதி பையன், என்ன செய்ய டா..எவனும் என்ன தூக்கி வளக்கல, பிச்ச பொழப்பு தான்., என்ன மாறி இருக்க ஒரு அக்கா கிட்ட போக முடிஞ்சி மகாராசி அவ தான் என்ன இங்க கூடிடு வந்த...முதல பிச்சை தான் எடுத்தேன்..எப்பாவது தான் சப்பாடு, பாத்துரும்ல தூங்கி இருக்கேன், பனி, மழ எதுனாலும் நான் ஒதுங்கற இடம் பாத்ரூம் தான்..அப்புறம் இங்க இருக்கவங்ககூட அப்படியே பழகி , எல்லாம் ஒன்னாயிடோம். என்ன வளர்த்த அந்த சிறுக்கிமவ பாதியில விட்டுட்டு செத்துடா.
அப்புறம் தான் இந்த தொழில் என்றார்.
அவர் இவ்வாறு சொல்லும் போது எனக்கு
அரசு பேருந்து நிலையங்களில் உள்ள கழிவறைகள் கண்முன்னே வந்தன..
என்னால இரு நிமிடம் இருக்க இயலாது இடம் அது. அப்புறம் என்ன முதல்ல படுத்தவன் எனுக்கு கொடுத்த காசு 250 ரூபா.. அப்பெல்லாம் இருபதிரெண்டு வயசு இருக்கும். அதெல்லாம் சொல்ல முடியாத வலி டா.. நினச்சி பாரு..நீங்க எல்லாம் என்ன நினைகறீங்க..காசுக்காக உடம்ப விக்கறாங்கனு ..உடம்பு மட்டும் இல்லடா
உணர்வுதான்..நான் ஆம்பள இல்ல, பொம்பள இல்ல, ஆன எனக்கும் உணர்வு இருக்கு.
புதுச யார் தொட்டாலும் ,என்ன எத்தன பேரு தொட்டாலும் அது எனக்கு வலி தான்..சுகத்துக்கு செய்யல..சோத்துக்கு தான்.
உனக்கு தெரியுமா தெரியல..அது ஒன்னும் சும்மா இல்லடா..இந்த வயசுல தெரியாமா இல்ல உனக்கு. வலிக்கும், காலில எழுந்த நீக்க முடியாது. எங்கிட்ட வரவேன் எல்லாம் அழகு பாத்து வரவேன் இல்ல..அவன் பசி தீக்க வரவேன். புலி பசிக்கு புல்லென்ன புழு
என்ன எல்லாம் திம்பானுங்க. இதுல ஒவ்வொரு தேன் பெரிய வாரி வல்லலாட்டம்
ஏன் இந்த தொழிலுக்கு வந்தனு கேப்பாம்..
டே *ண்ட வந்த வேலைய பாரு, இல்ல உம் காசு *ண்ட லாம் வேண போடா எழுந்துனு எல்லாருமே சொல்லுவோம். ஏன் என்று நான்
கேட்பதற்கு முன்பே, அவரே விடை அளித்தார்.
பின்ன எனக்கு என்ன இந்த நாய் கூட படுக்க ஆசையா..எல்லாம் வயத்துக்கு தான் என்றார்.
இதுல எனக்கு ஒருத்தன் கவிதை கூட சொன்னா என்றார். என்னை ஆர்வம் அடித்தது. என்ன கவிதை கா.? இருடா..
சொல்றேன்.
"உன் இரு மலைகளை கடந்து ,
பள்ளத்தில் குதித்து நான் வந்ததெதற்கு?
நடுவில ஒரு சின்ன கோடு,
அதில் நான் ருசிக்கதேன் கூடு."
என்றார்.
இருவரும் நன்றாக சிரித்தோம். நீங்க என்னக்கா சொன்னீங்க என்றேன். நானா.?
நான் என்ன சொல்ல... நல்லத்தான் இருக்கு
ஆன காசெல்லாம் குறைக்க மாட்டனு சொன்னேன். இருவரும் சிறு புன்னகை யுற்றோம். பேருந்து போவது போல் இல்லை,
ஊர்வது போல் இருந்தது. எனினும் அதற்கு
மனம் மகிழ்ந்தது. அக்கா ஏதோ ஏழு நூறுனு சொன்னீங்களே அது என்ன என்றேன்.?
சிறு புன்னகையுடன் , எனக்கு ஒரு னைடுக்கு
400, 500 வரும்டா..600 லாம் கஷ்டம்
எப்பாவது ஏஜெண்ட் கூடுடி எங்கையாவது வெளியூர் போவான் , அப்ப 600 கிடைக்கும் எஜெண்ட் எடுத்ததோட..ஆன எனக்கு 700 வாங்கனும் னு ஆச...அதான் சொன்ன
என்றார். ஏன் கா..700 ரூபா னா நீங்க நல்ல சம்பாதிகிறிங்க..
அப்புறம் ஏன்..கா..?டே..
நான் வாரத்துல 4, 5 நாள் தான் வேலைக்கு போவேன். இப்ப சரி வயசாகிடுச்சனு என்ன யாரு பாத்துப்பா..? அதான் செத்து வைச்சி வழறேன். என்றார். ம்..பாவம் என்றது மனம்.
ஏதோ அவர் முகத்தில் சோகம் சூழ்ந்தது,
நான் அவரது கையை பிடித்தேன் ஏன் அக்கா
என்றேன். ஒன்னு இல்லடா நல்ல படி என்று முந்தானை மூலம் கண்களைத் துடைத்தார்.
எனக்கும் கண்கள் கலங்கின. அவரை கட்டி அணைக்க வேண்டும் என்று இருந்தது.
அக்கா கவல படதீங்க..உலகம் மாறும் என்றேன். எனக்கு என்னடா வாழ்ந்த கட்ட,
பழகீறுச்சி என்ன மாறி லச்சபேரு இருக்காங்க...நீ படி என்மாறி இருக்க நாலு பேருக்கு உதவுங்க என்றார். அவர் முடிக்கையில் காந்திபுரம் வந்ததது. அவரிடம் அக்கா ஒரு அக் என்றேன். ம்..என்று சிரத்தவாரு கட்டி அணைத்தார். எனக்கு தங்கை இல்லை, தாயும் இல்லை, அவளே கீழ் இறங்கி வந்து அணைத்தது போல் ஏதோ என் கண்களில் ஓட்டம். அவரிடம் பெயர் கேட்க மறந்தேன், அவர் பேச்சுகருவி எண் கேட்க மறந்தேன், ஆனால் என்ன அவர் உள்ளம் அறிய மறக்கவில்லை, மறக்கபோவதும் இல்லை. அணைத்தவுடன் அவர் கூட்டதில் கலந்தார். பின்பு தான் அறிந்தேன் , ஏதோ நான் நிற்வாகமாக நிற்பது போல் மக்கள் கூட்டத்துடன், என் நணபர்களும் என்னை பார்த்தனர். அதில் ஒரு முகம் சுலித்து சலித்தது. என்னடா என்ன பண்ணற என்று நண்பர்கள் கேட்க ஆஸ்டல சொல்றே என்றேன். பின் வேறு பேருந்து ஒன்று ஏறி விநாயகர் இருக்கும் இடத்திற்கு சென்றோம்.
நீண்ட வரிசையில் மக்கள் அவரை தரிசனம் செய்ய காத்து கிடந்தனர். வாயில் வரை கூட்டம். கருவறை மூடப்பட்டு இருந்தது. அனேகமாக அலங்காரம் நடந்துகொண்டு இருக்கிறது என்று நினைத்தேன். திரை திறந்தவுடன் ஊரே விநாயக என்று ஆரவாரத்துடனுடம் உச்சாகத்துடனுடம்
கத்தினர். என் மனம் சொன்னது...யானை முகத்தை கொண்டு மனித உருவில் இருக்கும் இந்த சடலக்கல்லை வணங்கும் கூட்டம் தம்மில் பாதி பாதி இருக்கும் மனித உருவை மிதிக்கிறதே என்று. மனதில் இரு கெட்டவார்த்தைகள் , ஒன்று அந்த கல்லிற்கும்,
மற்றோன்று இந்த மலக்கூட்டதிற்க்கும்.
அருமையான பதிவு நண்பா... வாழ்த்துக்கள்... மேலும் உன் எழுத்து மலரட்டும்
ReplyDelete