பஞ்சர் கடை பட்டதாரி.

துணி தைப்பவர்கள் நூல் கண்டுகளைப் போட்டு வைக்கும் டாப்பாவில் இருந்து ,ஒரு நூலை மட்டும் தனியே எடுக்க முயன்றால்
பல நூல்கள் பின்னி இருப்பதை காணலாம்
அது போல் பின்னி இருந்தது மரக் குச்சிகள்.
சாலை போடுவதற்காக வெட்ட பட்ட மரக்குச்சிகளை சேமித்து அடுக்கி வைத்திருந்தை பார்த்தபடி இருக்க, எங்கள் வீட்டு கிழவி சத்தம் கேட்து. டே....டே...
சந்தையில் 6அடி உயரம் கொண்டு கொங்கு தமிழிலே கத்தும் வியாபாரி தோற்பான் என் பாட்டியிடம்.எனக்கு என் பாட்டியின் கதையை ஒரு புத்தகமாக எழுத ஆசை, நிச்சயம் எழுதுவேன் என்று நம்பிக்கை உண்டு.
விரைந்து செலவதெல்லாம் என் ரத்தத்தில்
இல்லாத ஒன்று, எனினும் உங்க அப்பன் குப்பிடரான் என்றதும் ஓடி சென்றேன். அப்பா என் அனைத்தும் அந்த ஜிவன் மட்டும் தான்.
வேலைக்கு கிளம்பும் அவர் எங்கள் இருச்சக்கர வாகனம் பஞ்சர் ஆனதை அறிந்து என்னை அழைத்து பஞ்சர் போட சொன்னார். நானும் சுற்றி ,சுற்றி பார்த்து
காத்து தான் கம்மியாக இருப்பது போல் உள்ளது என்றாலும், அப்பா உறுதியாக பஞ்சர் என்றார். சரி என வீட்டில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் உள்ள பஞ்சர் கடைக்கு வண்டியை தள்ளி கொண்டு நிறுத்தினேன்.
ஒரு வயதான பெரியவர் , ஒரே நாற்காலி உள்ள ஒரு சிறிய குடுசை போன்ற கடையில்
ராஜா போல் அமர்ந்திருந்தார். பேனர் துணி எடுத்து இரண்டு அட்டை மேல் போடப்பட்டு, அதை அப்படியே நான்கு குச்சிகள் நட்டு வைத்து எடுத்து வைத்தது போல் இருந்தது அவர் கோவில் அறை. ஆனால் நான் கண்டு வியந்த ஒன்று , என் பள்ளி அறையை விட தூய்மையாய் இருந்துது .அந்த வழியில் நிறைய முறை சென்றிருந்தும் அவ்வளவு பெரிதாய் நான் கவனிக்கவில்லை. அந்த கடையில் லாரிக்கு மட்டும் தான் பஞ்சர் போட படும் என நினைத்து பல முறை இதை விட தூரத்தில் இருக்கும் கடைக்கு தள்ளி சென்று இருக்கிறோம். ஆனால் அந்த ஆள் மாறிவிட்டார் , இவர் புதிது என நாங்கள் அறியவில்லை. ஐயா, பஞ்சர் போடனும்..
பண்ணுவிங்கலா..? என்றேன்.
வா..கண்ணு , இங்க நிறுத்து. என்று சொல்லிவிட்டு , மேல் இருந்த சாக்கு பையை
எடுத்து ஏதோ முட்டை அட்டை வைப்பது போல் கவனமாக கீழே வைத்து..இரண்டு இரும்பு கம்பிகளை எடுத்து வந்தார். நான் சென்டர் ஸ்டேண்ட் போட தடுமாறினேன் எனினும் அவர் அறியும் முன் சமாளித்து விட்டேன்.
என்னிடம் இருந்த பைக் சாவியை அவர் அமர்ந்து இருந்த நாற்காலி மேல் வைத்துவிட்டு, கைப்பேசியை அதற்கு பக்கதில் உள்ள கல்லின் மேல் வைத்தேன்.
இப்போது எனக்கு வேடிக்கை பார்க்கும் நேரம். அவர் என்ன செய்கிறார் என்று அவருக்கு நேர் எதிரில் தவளைப் போல் நின்று பார்த்தேன். அவரும் அப்படி தான் நின்று இருந்தார். இருமுறை சக்கரத்தின் ஸ்குருவை எடுக்க முயன்று , மூன்றாவது முறை வெற்றி கண்டார். அண்ணா, டூயுபை மாத்தனுமா என்றேன்.? இல்ல கண்ணு இதுக்கு என்ன நல்ல இருக்கு..மாத்தி காச
வேஸ்ட் பண்ண வேண்டாம் என்றார்.
சரி ணா...அப்படியே டையர்ல ஆணி இருக்கனு பாருங்கனா..என்றேன்.
பாக்கலாம் கண்ணு என்றார். ஏதோ காத்து அடிக்கும் இயந்திர உதவியுடன் டூயுபில் காற்றை நிரப்பி, குழந்தையை தாய் தன் கண்ணத்தில் வைப்பது போல் அதை வைத்து சுற்றினார். எனக்கு அது புதிதாய் இருந்தது.
நான் கண்டவரை தண்ணிரில் சுழற்றி தான் பாரத்திருக்கிறேன். அவர் அவ்வாறு செய்தது
எனக்கு அழகாய்தோன்றிற்று. ஓட்டை இருக்கும் இடத்தை அறிந்து அவர் எச்சிலில் முத்தம் வைத்தார். கருப்பு கட்டி போல் ஒன்றை எடுத்து அந்த இடத்தை நன்கு தேய்த்தார். நான் அந்த கருப்பு கட்டியின் வேதியில் பார்முலாவை நினைவு கூற முயன்றேன் எனினும் என் மறதி வென்றது.
பின் டயரில் ஏதோ வெள்ளையாக பொடியை போட்டு சுற்றி , சுற்றி பார்த்தார். நான் என்ன
பொடி அண்ணா அது என்றேன்.
பான்ஸ் பௌடர் என்றார்..எனக்கு ஏதோ சிரிப்பு வந்தது. பான்ஸ் பௌடரா..?
நாமெல்லாம் போடுவோமே அதுவா என்றேன். நான் பௌடர் அடிக்க மாட்டேன்.
ஆன அது தான் இது என்று புன்னிகைத்தார்.
ஏன் ணா பௌடர் போடறிங்க .?
என்றேன். சக்கரம் சுத்தரப்ப இட் ஆக கூடாதுதுனு பௌடர் போடுவோம் என்றார்.
எனக்கு இத்தனை நாள் இது தெரியாத ஒன்று.ஏன் சுற்றினால் இட் ஆகுமா..
என்று என் மனத்துக்குள் பல குழப்பங்கள்..
அவர் ..லாரிக்கு 1000, 1500 ரூபாய்க்கு பௌடர் வாங்கி போடுவாங்க என்றார்.
என் குழப்பம் அதிகம் ஆனது. அவரிடமே
கேட்டேன் , சுத்தும் போது இந்த உரச்சுமுல ..
ஆமா ..விரிக்கஸன் (Friction) ..
ஆன் அதுக்கு தான் பௌடர் என்றார்.
எனக்கு சந்தேகங்கள் இமயம் ஏறினாலும்
எனக்கு கேட்க மனம் இல்லை. எனினும் அவர் விடவில்லை..சக்கர சுத்தரப்ப டுயுப் இட் ஆக கூடாது கண்ணு..ஜே.சி.பில இருந்து இந்த வண்டி வரைக்கும் டூயுப் ஒன்னு தான் ஆன
டையர் வேர..டூயுப் ரேட் கம்மி..டையர் தான் ரேட் அதிகம்...என்றார். அவர் வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தது. தன் அழுக்கு வேட்டியை மடித்து கொண்டு என் வண்டியிடம் சென்று ஒரு சாக்கை போட்டு, அதன் மீது அமர்நதார். அவருக்கு உதவ நான் தவகளை ஆனேன். சிறிது நேரத்தில் வேலை முடிந்தது.
எவ்வளவு ணா..என்றேன் ..நூறு கண்ணு என்றாவாரு.. கோவிலுக்குள்ளே சென்று தண்ணீர் குடித்தார்..நான் வீடுக்கு சென்று என் தந்தையிடம் காசை பெற்று வந்தேன்.
என் கண்ணு ...என் நடந்து போன..
வண்டில போக வேண்டியது தான..
அவ்வளவ நம்பிக்க இல்லாதவன் நான்..
என்றார். இல்ல நான் அப்படி இல்ல சும்மா..
இங்க தான் வீடு அதான் நடந்தே என்றேன்.
அதான் வண்டில போய்டு எடுத்து வந்திருக்கலாம்ல.. என்றார்.
அதுல என்ன ணா இருக்கு ..பரவால விடுங்க என்றேன்.
அப்படி இல்ல கண்ணு.மனுசன் மனுசன் நம்பனும்..நீ தருவனு நான் நம்புவேன்
அந்த நம்பிக்க உன்ன தர வைக்கும்..
சும்மா சொல்றேன் கண்ணு ..என்றார்.
சிரித்துக்கொண்டே சரி ணா..நம்புவோம்..
வரேன் என்றேன். வண்டியில் வரும் சில தூரத்தில் நினைவு கூர்ந்தேன் , தம்பியின் கை உடைந்த போது, சிகிச்சைக்கு அம்மாவும், அப்பாவும் அவனுடன் கோவை சென்று அதிகம் பணம் எடுத்து செல்லாமல் இருந்த சமயத்தில் நாளையே அறுவை சிகிச்சை செய்திடலாம் என்றதும் , பணத்தை வீடு சென்று தான் எடுத்து வர வேண்டும் சார்,
ஆப்பேரசன் செய்ங்க , நான் நாளைக்கு போய் எடுத்து வந்து கட்டி விடுகிறேன் என்ற
அப்பாவின் வேண்டுக் கோளை நிராகரித்து ,
ஒரு நாள் தள்ளி அறுவை சிகிச்சை செய்ததும்..அதே சமயத்தில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டு என் பள்ளி கட்டணத்தை சில வாரங்களில் கட்டி விடுகிறேன் என்று அம்மா சொல்லியும்
நிராகரித்து நிர்வாகம் மூன்று நாள் பள்ளி
வர வேண்டாம் என்றதையும் நினைத்தேன்.பணம் அளவு அதிகம் என்றால் மன அளவு குறைவு, மன அளவு அதிகம் என்றால் ,பண அளவு குறைவு.

நம்பனும் கண்ணு..நம்பர ணா.




Comments

  1. 𝐕𝐞𝐫𝐲 𝐧𝐢𝐜𝐞

    ReplyDelete
  2. Replies
    1. அருமையான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே... மேலும் உன் எழுத்துக்கள் மலரட்டும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்