எம்மண்
தமிழ் நாட்டின் பெருமைகள்
பக்கம் ஒன்று போதிடுமா
என் மண்ணின் பெருமைகளை எழுதிட..
பாதியாவது ஆகிடுமா..
என் ஆயுள் வரை நான் அதில் உறைந்திட..
மன்னாதி மன்னன் எல்லாம்
மண்டியிட்ட மண் ஐயா..
மரியாதை தந்துவிட்டால்
மகுடம் தரும் விண் ஐயா..
பசி என்று சொல்லி விட்டால்
பருத்தி படுக்கைமேலே
பச்சரிசி தாரும் ஐயா
பாதகம் செய்ய வந்தால்
பாவம் உயிர் ஏற்றும் ஊர் ஐயா.
தாயும் தாயகமும் தமிழ் போல்
தான் ஐயா..
தவிக்கும் வயிற்றிற்கு பால்
கொடுப்பாள் என் தாய் ஐயா...
சாதி மதம் இங்கே சாக்கடை தான் ஐயா
சாவதற்கும் தயங்கா வீரன் நான் ஐயா..
யாவரும் போற்றி பாடும்
புண்ணிய பூமி ஐயா..
"யாதும் ஊரே "என்றவன் என்
புலவன் - இறைவன் ஐயா..!
வள்ளுவமே வாழ்க்கை ஐயா..
வானில் இருக்கிறோம் அதை
வாழ்பவர் அறிவோம் ஐயா...
Comments
Post a Comment