காதல்

சிற்றின்பமோ..
பேரின்பமோ..
சில வரியில் முடிந்துவிடும்
சின்னத்தொரு கதையோ..
பெரு அடி எடுத்து வைக்கும்
பேனா முள் முனையோ...!
அளவோடு முடிந்துவிடும்
அந்தி வானத் தூரமோ..
அளவின்றி அடுக்கி செல்ல 
என் ஆசை அட்டவணையோ...
பழுது பார்த்து சரி செய்ய
பழைய இரண்டு பிழையோ
பாசம் நேசம் எல்லாம்
சேர்ந்த பெற்றோர் எனும் கவியோ...
என்னவென்று எழுதிவிட்டால்
ஒரு பொருள் ஆக கூடும் என்பதால்
எழுதாமல் ஒதுக்கிவிட்டேன்..
எண்ணங்களை எழுப்பி கூடு
செய்து அதில் உன்னை வாழ விட்டேன்
காதலி .! அளக்க இயலா
சிலவற்றில் என் காதல் தானே 
முதலிடம்.

#காதல்

- ச.வி.ஆகாஷ்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்