தமிழ் தாய்

எத்தனை எத்தனை பிரசவங்கள்..
எத்தனையோ வலக்காப்பு..
தாயே..!
என் தமிழே..!
எத்தனை பிள்ளைகளைப் பெற்றெடுத்தாய்
என்றும் அன்னையாய் அறவணித்தாய்
எத்திசையில் நீ முலைத்தாய்
எதற்கும் நீயே வழிவகுத்தாய்..
அழகா!அறிவா!
ஆறு கோடி சொற்களிலே
அழியாத காவியம் தான்
அற்புத ழ - வினிலே.
முதன்மை என்ற போதும்
முதுமை தான் ஏற்படவில்லை..
முழுவதும் புதிதாகும் பின்னே
வளர்ச்சிக்கு தடையேதும் இல்லை..
எந்த மன்னனாலும்
மண்ணை அசைக்க இயலவில்லை..
எவ்வளவு போட்டியாளன்
என்பதெல்லாம் கோப்பை ஏந்தியவனுக்கு
தேவையில்லை..
அறை நூற்றாண்டு வந்துவிட்டால்
அழிவாயோ ஆரியம் போல்..
அடுப்பு தீ ஆகிடுமா...
ஆழ்கடலை ஆவி ஆக!
பஞ்சம் பிழைக்க வந்தவனுக்கு
பாதி உயில் தந்திருந்தாய்..
பாவம் வரலாறு இல்லாதவனுக்கு
உன் வரையறையை இடயிருந்தாய்..!
மதக்கூற்று வந்த போது
எவ்வளவு வலிப் பொருந்திருந்தாய்
மறவாமல் இருப்பேன் அம்மா!
மதச் சாக்கடையில் குதிக்காமல் இருக்க.. 
ஆங்கிலம் ,இந்தி எல்லாம்
அணிப் புடுங்க ஆகிடும்தான்
கடலில் கப்பல் முழுகும்
கட்டுமரம் தான் முழுகிடுமா..!
பிணம் ஆகிடுவான்.. அம்மா
உன் பிள்ளை முன்னே
வள்ளுவன் போதுமே
உன் வளர்ப்பை வரைந்தெடுக்க
தமிழில் பெயரில்லை என்று கோடி
வருத்தம் உண்டேனக்கு
தாயே உன் குழந்தைகளில்
நான் ஒருவன் என்பதே நீ கொடுக்கும்
அன்பேனக்கு..
வீழ்வாய் வீழ்வாய்
எனக்கூட்டம் கதறி விட்டால்
வீழ்நதிடுமோ கதிரவன்
கரையில்..வீழமாட்டய்
நான் சொல்லி அறிவதில்லை
குருதி இருக்கும் வரை
குடைப்பிடிப்போம் தாயே உனக்கு..
குழி வெட்டி உள்ளே
போட்ட பிண்ணும் கல்லில்
எழுதுவது உன்னைத் தானே
வாழ்க நீ..
வாழ்க நீ..
உலகில் யாரும் வாழார் போல்..!

#தமிழ் தாய்
 















      


Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்