வண்ணக்காரிகை
கருப்பு தான் சிறந்த நிறம் கண்கள் காண்பிக்கின்றனவே ..
காலையில் மோதும் சிறு கூந்தல்
கூடலில் அழகு சேர்க்கும்..
இல்லை...
சிவப்பு கொஞ்சம் எட்டிப் பார்க்கிறதே..!
ஏனோ கருப்பு தன் கதவை மூட
சிவப்பு கசப்பை நீக்கி
உடல் சிலிர்த்து உறவு கொள்வோம்...
கைத் தூரம் நகர்ந்து சென்றால்
வெள்ளை அங்கே விதைக்கப் பட்டுள்ளதே
வெயிலே காண இடம் போலும்
வெட்கம் அங்கே முலைப்பயிர் ஆகும்.
மலைக் கடந்து இடை வந்தால்
மாநிறம் குழியில் மயங்கி படுத்துள்ளதே..
தட்டி எழுப்பி தசைகள்
தாண்டவம் ஆட..
ஈருயிர் அங்கு சடுகுடு பாடும்...!
யோசித்து நான் நகர்ந்தால்
கருப்பு வெள்ளை குழந்தை பெற்றது
போல் கலை நயம் மிக்க
மலையிரண்டு தவம் செய்யும்
மயக்கம் அடைய மதுவும் செய்யும்...
சுத்தி வந்து தான் நோக்கினால்
வானவில் வாடகை இருக்க...
வந்த பயணம் வானளவு சிறக்க
சிற்பி எவனோ என்று சிந்தனை செய்கிறது
சில்லென்ற உடலும் சிலையை நாடுக்கிறது..
எட்டி வைத்தால் கால் இருக்க
என் தாகம் இன்னும் தொடர
முற்றுப்புள்ளி வைத்தது
முந்தானை முனை...
விரல்கள் யாவும் என்னை கவர
செய்த வினை...
#காதலி
- ச.வி.ஆகாஷ்.
Comments
Post a Comment