ஐந்நூறு ரூபாய்

கஷ்டம் தான்..என்ன செய்ய.. வாழ்வில் கஷ்டம் என்ற ஒன்று நடுநிலை மக்களுக்கு வரும் எனில் அது பணத்தால் தான் பாதி சதவீதம் இருக்கும்..இங்கு மட்டும் என்ன அதே தான்..பாசம் வைத்து படி அரிசி கூட வாங்க இயலாது.காதல் கத்தரிக்காய் எல்லாம் பணம் இருப்பவனுக்கு தான் என்பது பொய் என்றிருந்து மெய் ..என அனுபவம் பாடம் சொல்லியது.தாய் தந்தைக்கு தெரியாது இருக்க அவன் மகன் தவறு மட்டும் தான் செய்வான் என்பதல்ல.. தாய்க்கு தெரிந்தால் துன்ப படுவாள், தந்தை தன் இயலாமை நினைக்க நேரலாம் ,என்று தானே பண வழி தேடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பொய் உரைத்து ஈட்டலாம்... அது சொந்த செலவாக தான் இருக்கும் என்பது சிறிது சமயங்களில் உண்மையல்ல .. கைப்பேசி செலவு என்பது தந்தைக் கொடுக்கும் கைக்காசுக்கு அப்பாற்பட்டது தான் உண்மை நிலை. ஐந்நூறு ரூபாயில் ஐந்து நூறுகள் தான் உள்ளது என்பதை மறந்துவிடுகிறார்களா என் சில சமயம் தோன்றினாலும்.. அவர்கள் படும் கஷ்டம் கண் முன் வரும்போதெல்லாம்..கஞ்சனாக இருக்கவே ஆசைப்படுக்கிறேன்.தவிர்க்க முடியாத நிலை ஆயின் ஆராய்ந்து ஐநூறை ஐம்பது பத்துகளாக எண்ணுக்கிறேன்.கல்லூரி பக்கங்கள் பணத்தாசையில் அலைந்த அனுபவமாக இருந்திடுமோ என்ற ஐயம் எழுக்கிறது..இதற்கு மேல் அன்னையிடம் அடுக்கும் பொய்கள் மலையாக மாறி மனதை மடியச்செய்கின்றன.. யாரிடமும் சொல்ல வழியில்லை..சொன்னாலும் வலி குறைவது போலும் இல்லை..நினைவில் வருவதெல்லாம் சிறிய வயதில் எளிதாக துலைத்த ஐந்நூறு ரூபாய் தாள்கள் தான்.துலைததைச் சொல்லும் போது அப்பா என்ன சொல்வார் என்ற பயம் இருக்கும்,ஆனால் அவரோ எதும் சொல்ல மாட்டார் அறிவுரை கூட.. பரவாயில்லை விடு என்று மற்றோரு ஐந்நூறு ரூபாய்..அப்போது தயக்கம் காட்டவில்லை..இன்பம் தான் இப்போது வலிக்கிறது.. ஒவ்வொரு முறை வீடு சென்று திரும்பும் போது அவர் சில்லரை யாக கோர்த்து கொடுக்கும் ஐந்நூறு ரூபாய் தாள்கள்..கையெல்லாம் நடுங்கி வாங்குகிறேன் தயக்கத்தோடு இந்த முறை. நிலை மாறும் என்ற ஆசை நிரந்தர மாகாது பலிக்கும் என்று ஒவ்வொரு முறையும் வேலை செய்யும் போதெல்லாம் கூறி கொள்கிறேன் உள்ளே...மாற்றம் ஒன்றே மாறாதது.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்