எம்மொழி

காணும் எழுத்தெல்லாம் சித்திரம் எங்கள் கலையினிலே தெரியுமடா சரித்திரம்.. ஆதி அந்தம் அரவணைக்கும் மொழித்திரம் ஆசை மொழி எங்கள் மேல் காட்டும் அன்பு தரம்... வாழ வகுத்த மொழி.. வாய்மை காக்கும் மொழி... வாலை பிடிக்கும் மொழி... வஞ்சகம் வரின் நாவை அறுக்கும் மொழி.. வந்தாரை வாழவைக்கும் நிலத்தவர். வாண்புகழிலும் வழிமாறாமல்பொறுத்தவர் கையேந்தி நின்றுவிட்டால் உயிரையும் கொடுப்பவர் காண இயலாது தமிழர் போல் ஒரு இனத்தவர்... பாசம் காட்டுவதில் தாய்ப்பால் போல் சுத்தம் படை ஏதும் வருவதில்லை செய்ய எங்களிடத்து யுத்தம்.. பாரம் உடல் பிரியும்போது நினைத்திருப்பேன் உன்னை நித்தம் நீ தான் காதல் தமிழே! என் ஒவ்வொரு உயிர்த் துளி ரத்தம்... தாயையும் தமிழையும் வேராக நினைப்பதில்லை தாலாட்டு பாட சொன்னால் அவள் எப்போதும் மறுப்பதில்லை தாங்காது துயர் வந்தால் அவள் மடி போதும் வலியில்லை ... தாங்கி பிடித்து விடுவாள் துணிவு வேறு தேவையில்லை.. மொழிகளின் முன்னோர் மற்றவரெல்லாம் நமக்கு பின்னர் ..மொழிந்திட தேவையில்லை மொத்த உலகம் அறிந்த உண்மை.. கடவுளை வணங்குவதை விட கண்ணான என் தமிழை வணங்குவது அதிகம்.. கடல்போல எழுத்துக்கள் உண்மையில் வலம் அதைவிட தான் அதிகம்... வாழை போல் வாழவேண்டும் வானம் வீழும் வரை நீ வேண்டும் வாழ்வது நாமாக வளர்வது தாமாக அமைய வேண்டும் தமிழ் தாயே.. வாழிய !வாழிய !நீ .. எங்களை வாழ வைத்த வரம் எனும் தீ..!

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்