போரில் தோற்றேன்.
உன் உடல் ஒர் போர்ப்படை
அதில் உடை என் வெற்றிக்கு தடை..
உன் வெட்கம் அது என் பலம்..
என் ஏக்கம் எல்லாம் என்று செல்வேன் களம்..?
வேண்டாம் என்ற சங்கு ஊதி
போரை ஆரம்பித்தோம்..
வேண்டிய உன் விரர்களை
வெளியேதான் செல்லவைத்தோம்..
வால் கொண்டு குத்த வந்தாய்
வாயால் அவற்றை சுவைத்தேன்..
கோள் கொண்டு கொல்ல வந்தாய்
கூந்தல் குணத்தை அறிந்தேன்..
யானைப்படை எங்கு என்று தேடி நான் பார்த்தேன் ..
யாவரும் அறியா வண்ணம்
மத்தியில் மறைத்து வைத்தாய்..
பாலாடை எடுத்து கட்டி பாலிலே
குதிக்க வந்தேன்...
பஞ்சம் உள்ள பாலை நிலத்தில்
பரவலாக விதைத்து வைத்தேன்..
குதிரை படை வந்த போது
என் மீசையை முறுக்கி கொண்டேன்.
தூதரை கண்டவுடன் அவன்
தோளிலே தட்டி கொண்டேன்..
மந்திரி கிடைத்தவுடன்
மருவுலகம் அலைத்து சென்றேன்..
மறுபுறம் திரும்பிய போது என்
மன்னனை இழந்துவிட்டேன்..
என் படை ஓட்டம் காணும் என்று
எப்போதும் நான் எண்ணியதில்லை
தன் குடை சாயும் என்று
சந்தேகம் பட்டதில்லை..
தோல்வி என்ற ஒன்றை
கலவி தருமாயின்
கல்வி கற்று தோற்கவும்
தயாராக தான் உள்ளேன்...
ஒற்றை கோளை வைத்து
என்னை கோழை ஆக்கிவிட்டாய்..
ஒற்றை பார்வை கொண்டு
போரை போர்வையால் மூடிவிட்டாய்..
சிறைப்பிடித்தாய் என்னை நீ
உன் தேகம் கொண்டு
சில நாளில் வெல்வேன் நான்
என் தாகம் கொண்டு..
சிறையில் இருந்தபடியே
சிந்தித்து வருகிறேன்....
சிலவற்றை படையில் மாற்றி
உன்னை சிறைப்பிடிக்க வருகிறேன்
Comments
Post a Comment