கலியுகம்
ஒரு தோட்டக்காரன் தன் இடத்தை
ஒரு வியாபாரியிடம் விற்கிறான்.
இரண்டு நாட்கள் கழித்து அந்த வியாபாரி அவ்விடத்தில் தோண்டும்
போது ஓர் புதையல் கிடைத்தது.
அப்புதையலை எடுத்து கொண்டு
அவன் தோட்டக்காரனிடம் செல்கிறான்.இப்புதையின் உரிமை உங்களை சாறும் இடம் மட்டுமே எனக்குரியது என்றான்.எனினும்
தோட்டக்காரன் அதனை மறுத்து
இடமே உமது ...என்றால் அவ்விடத்தில் உள்ள அனைத்தும்
உம்மையே சாறும் என்றான்.
இருவரும் உமது உமது என
சண்டைப்போட இறுதியில் தர்மரிடம் செல்கின்றனர்.தர்மர் இரு தரப்பையும் கேட்டு இரண்டு நாட்கள் கழித்து தீர்ப்பு வழங்குவதாக
கூறினார்.அதே போல் இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வரும் போது.. வியாபாரி இடம் எமது என்றால் அதில் உள்ளவையும்
எமக்கே உரியது என்றான்.
தோட்டக்காரன் இடம் மட்டுமே அவரது அப்புதையல் எமது என்றான்.அன்று தர்மர் கூறுகிறார்
இன்று முதல் என் யுகம் முடிந்து
கலியுகம் தோன்றுகிறது என்று.
Comments
Post a Comment