கனவில் வந்த கட்டில் கதை
நானும் என் ஆசை காதல் மனைவியும் புதிதாக கட்டிய எங்கள் வீட்டை நிரப்பும் வகையில் ஊர் உலகம் எல்லாம் திரிந்து புதிது புதிதாக சாமான்கள் , அலமாரிகள், போன்றவற்றை அந்தந்த அறைகளுக்கு தகுந்தவாறு வாங்கி அமைத்த நேரம்.எல்லாம் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்று அவள் விரும்பியதால்
அவள் என்னை படுத்தியபாடு , அலைச்சல் எல்லாம் வார்த்தைகளில் அடங்காதவை.
விடுமுறையிலும் வெளியே செல்ல மறுக்கும் என்னை விட்டையே அவள் இரவில் மட்டும் தான் காண்பித்தாள்.அதும் நாங்கள் வாடகைக்கு இருந்த வீடானது புதிதாக கட்டிய வீட்டிற்கு எதிர் திசையில் பல மைல்கள் தள்ளி அமைந்ததால் கொஞ்சம் அதிகமாகவே உழைத்தோம் ,இரவிலும் கூட கூடி. காதல் திருமணம் ஆகி ஓராண்டு நினைவு பரிசாக நாங்கள் எங்கள் வீட்டை எங்களுக்கு அளித்து கொண்டோம்... படுக்கை அறையானது
நாங்கள் பார்த்த ஓர் திரைப்படம் போல இருக்க வேண்டும் என்பதால் அனைத்து அறை அலங்காரம் முடிந்து அது மட்டும் நின்றது. எங்களுக்கு அதை போலவே அலங்கார பொருட்களை வாங்கி தருவதாக சொன்ன கடை ஊழியரை நாங்கள் பார்க்க
சென்றோம்.அவள் விரும்பிய அனைத்து
அழகிய வண்ணம் நிரைந்த பொருட்கள் அந்த படத்தில் பார்த்தது போலவே இருந்தது.கடைசியாக கட்டில் வாங்க அந்த
கடையின் மேல்புறம் சென்றோம்.அங்கு ஓர் ஊழியர் எங்களுக்கு உதவினார்.சார்..
இது இரும்பு கட்டில் .. துருபுடிக்காது. என்றார்
சத்தம் வருமா என்றேன்..?வராது சார் என்றார்.
என் மனைவியை பார்த்து சத்தம் வாராதான்
என்றேன்.என் காதலி சிரித்து கொண்டே
அமைதியா இருடா என்றாள்.அந்த ஊழியர் என்னை மேலும் கீழும் பார்த்ததை நான்
கவனித்தேன்.அடுத்து வேறு அறைக்கு அழைத்து சென்று, சார் இது மரக் கட்டில்
காரயான்கள் இதை ஒன்றும் செய்ய இயலாது
,இவை தரத்தில் உயர்ந்தவை என்றார்.
நான் தாங்குமா...?என கேட்டேன்.அவர்
ஒருமாறியாக தாங்கும் என விடையளித்தார்.
நான் என் மனைவியை பார்த்து தாங்குமாம்
என்றேன்.அவள் மீண்டும் சிரித்து கொண்டே அமைதியா இரேண்டா.. என்றாள்.அவர் இந்த
முறை மறைமுகமாக பார்க்காமல் நேரடியாகவே ஒரு பார்வை பார்த்தார்.
நான் சத்தம் வருமா..?
தாங்குமா என கேட்டது நாங்கள் இருவரும்
வினைச்செய்யும் போது அல்ல ..
அதன் விளைவாக வரும் ஒன்றை தாங்குமா..?
அவன் உருண்டால் சத்தம் வருமா..?
.என்பதற்கே தான் என்பதை அந்த ஊழியரிடம்
சொல்வதற்கு முன் என் மனைவியிடம்
சொன்னேன்.அவள் என்னை கிள்ளி
பொய் சொல்றப கூட அழக இருக்கடா நு
முத்தம் ஒன்று கொடுத்தாள்.நான் உண்மையில் பொய் சொல்ல வில்லை..😎.
Comments
Post a Comment