நீ வேண்டும் எனக்கு.

காதலி கூந்தல் பட்டால் கறையாத மெழுகு மனம் உண்டா...
காலையில் அவள் கண்களில் விழா
காரியங்கள் கடப்பதுண்டா..
மாறி மாறி மழை பெய்தும்...
மண் அதை வெறுப்பதுண்டா...
மலர்கள் மங்கை கொடியில் இருந்த
போதும் தான் மரணீத்ததை நினைத்துண்டா.
புயல் அடித்த போது பூவிடம்
தான் தஞ்சம் புகுந்தேன்..அவள்
புன்னகை புயல் ஆனதேன்று
அந்த பூ சொல்லி நான் அறிந்தேன்..
வெட்டி வெட்டி மரக்கிளைகள் வேரோடு
சாய்ந்த போது..
கட்டி கட்டி நான் வைத்த காதலுக்கு
காவல் நின்றேன்....
பூட்டி பூட்டி நீ மனதில்
வைத்த ஆசைகளை..
புதையல் புதையலாய் எடுத்து
நிறைவேற்ற நித்தம் முயன்றேன்..
உயிர் என்று உன்னை எழுதினால் என்றாவது
மறைவாய் என்று
உண்மை என எழுதவா..?
மண்ணில் மறந்தலும் மறையாமலாவது இருப்பாய்..
வரலாற்றில் உண்மையான வைரத்தை
இன்று நான் வெளியிடவா..
வர்ணம் வண்ணம் பூசாத
வரையாத ஓவியத்தை வானில் தான்விடவா...
இலையில்லா மரத்திடம் நிழலை கேட்க
முடியுமா..?
நியில்லா என் மனதிடம் இன்பம் கோர
முடியுமா...?
தயங்கி நின்ற போதெல்லாம்
தடுமாறி கடந்திருந்தேன்..
களவாடிய மனதை தான்
அவள் காலாணியில் காண கிடந்தேன்
வெப்பம் தலைக்கேறிய போதும்
வேர்வை படாமல் மனதிற்கு குடைப்பிடித்தேன்..
வெயில் முடிந்து இடி வரையில்
தாங்கி யாக தான் வந்து நின்றேன்..
தப்பு செய்த போதெல்லாம் நீ என நினைத்து
ஊனுக்குள் உண்மை சொன்னேன்..
உருத்தினால் மனம் எதோ சொல்ல வருகிறாள்
என காதை தான் கவர்ந்து கேட்டேன்..
வார்த்தைகளால் சொல்லவதல்ல வலி
வாழ்ந்து பார்  நீயின்றி என்ன  வழி..?
வந்துவிட்டாள் தருவேன் என் உயிர் துளி
வராமல் நின்றால் நிற்கும் என்  விழி.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்