கோலம் கலைக்க மனம் இல்லை
கோலம் போடும் போது உன் கோபுரம் சாயுதடி
கோபுரத்தை தாங்கி பிடித்திடவே என் கைகள் ஏங்குதடி....
புள்ளி இரண்டு வைக்கையிலே
என் எண்ணம் மாருதடி...
பூவைப் பறித்திடவே
புலம்பல் அதிகம் ஆகுதடி..
அரிசி மாவேடுத்து அங்கும் இங்கும் நீவைக்கையிலே..
அந்த சூரியனும் அழரி அடித்து
வந்து உன்னை பார்ககையிலே..
வெளிச்சம் பட்டு
உன் வேர்வை கொட்டும் போது
என் பார்வை சிதறுமடி..
வாசலை நீ தெளிக்கும் போது உன்
வளர்ந்த முடி
வலது கண்ணில் படும் போது
வாரி வாரி நீ விடும் பழக்கம்
என்னை வதம் செய்வது வழக்கம்..
பச்சை புடவை எனில்
அதை பக்குவமாய் எடுத்து இடுப்பில் சொருகி
பாதம் முதல் பாதி மேனி தெரிய
படர்ந்து வளர்ந்த பூக்கள் மட்டும் அதில் மறைய
பாடலை இயற்றுவது போல் வாசலில்
கூடலை இயற்றுகிறாய்...
காலையும் வேண்டாம் களவு மனம் என்
சொல்லி..
கண்களில் எனை ஏன் தேடுகிறாய்..
கடைசி வரிசையை வரும் போது
ஏன் கவலையாய் நான் இருக்கும்
இடத்தை பார்க்கின்றாய்...
வாய்ச்சொல் வேண்டமடி காதலி..
காலையில் காண வராதே என்று
வருந்தும் உன் மனதிற்கு வலி
தாங்க இயலாது என்னால் இன்று
ஒலிந்த நான் வெளியில் வரும் காட்சி
கண்டு ...
மகழ்ச்சியில் துள்ளுகிறது பூ வண்டு...
நடிக்கும் உன்னை
உன் அன்னை வரும் முன் அன்னையாக்க
விருப்பம் தான்..
ஆயினும் ஆன பின்னர் என்னை முன்பு
போல் அணைக்க மறுப்பாயின் நான்
என்ன செய்வேன்..?
அனைத்தும் வைத்து கொல்வோம்
காதலில் காமத்தில் மட்டும் கவனம் கொள்வோம்..
உன் தாய் வரும் வேலை என்பதால்..
என் தகப்பனாக்க போகும் உன்னை
சிறு இதழை மட்டும் சுவைத்து
கோலத்தை கழைக்க மனம் இன்றி
திரும்புகின்றேன்.
Comments
Post a Comment