கவிதைகள் இயற்ற இயலும் கருத்துக்கள் சொல்ல இயலும்
என்னால் காவியை எதிர்க்க இயலும்..எனினும் கதராடை அணிய மாட்டேன்.அறிவை வளர்க்க வேண்டி
அமைதி காத்து வந்து...அகிலம் யாவும் மாற்ற அனைத்து முயற்சியும்
செய்வேன்.
கொலை செய்தேன்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
வெட்டியான் ஆகிவிட்டேன் என் காதலை என்னுள் புதைத்ததன்
மூலம்.
அன்று 22.6.2021. இரவு ஏழரை மணி வரை இன்று அவள் பிறந்தநாள் என்று எனக்கு தெரியாது. எப்போதும் போல் தான் அன்றும் வேலை முடிந்து, ஆறாரை மணிக்கெல்லாம் எங்கள் வாடகை வீட்டின் திண்ணை மேல் அமர்ந்து, வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். எங்கள் வீட்டின் நேர் எதிரில் கிழக்கை பார்த்து அவள் வீடு இருக்கும். நான்கு அறைக் கொண்ட வீடு என நினைக்கிறேன். அறைகளின் மேல் மின் கம்பிகள் இணைக்க விட்டிருக்கும் துழைகள் கண்டு கணக்கிட்டேன். மேற்கு பக்கம் மட்டும் மூன்று சன்னல்கள் கொண்ட லைன் வீடு அது. எங்கள் வாசலுக்கும், அவள் அறைக்கும் நேர் எதிர். என் அறையில் இருந்து சில முறை அவள் தலை வாறுவதை ரசித்து இருக்கிறேன். முற்றிலும் மூடி தான் இருக்கும், சாமி சில சமயங்களில் தான் தரிசனம் தரும். எப்போதாவது தான் அவள் தெருவை விடுத்து , எங்கள் தெருவிற்கு வருவாள், ஆனால் துணி துவைக்கும் கல்லும், அதை துவற்ற கொடியும் மேற்கு திசையில் இருப்பதால் , மேற்கில் சூரியன் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை உதிக்கும். அவள் கொடியிலே துணிகளை போடும் போது, எனக்குள் புயல் எச்சரிக்கை கொடி ஏறும். உடையின் ஓரம் ஒரு பார்வை பார்ப்பாள...
முத்திரை பதிக்க முதுகிலே ஏற முத்தமிட்டு எனக்கு மூச்சும் தான் வாங்க அச்சிலை அழகவள் அங்கம் ஆயிரம் கவி பாட கம்பன், கவிஞன் எல்லாம் காலைத் தேடி இசை மீட்ட கற்று பெற்றவன் எல்லாம் மூளை மயங்கி முகவரி அறிய முகம் பார்த்து சிரித்துவிட்டால் இயங்குமா இதயமென ஆராய அருகிலே சென்றேன். முந்தானை மூடி இருக்க முப்பேர்ப் படை அவள் கண்ணாக இருக்க அம்பெரிய தேவையில்லை அவள் கண் அசைத்தால் போதுமானது. கண்ணம் எனும் பெரு வெடிப்பு காதல் அது நிற்கும் என் துடிப்பு ஏதும் செயாத உதடு தானே உண்மையில் நான் மண்ணாக காரணமானது. கீழே எல்லாம் வேர்ருலகம் அந்த வளைவு ஒன்றில் என் உதடும் இணைத்து இழுத்திட ஆசைப்பட்டு இருகி போனேன் இடுப்பல்ல இடி. தென்னங் கொழையிரண்டு தேன் சுவை பிரண்டு தேரிழுத்து போர் செய்வேன் பூவே உன் மார்ப்பாடா மனம் ஏங்கும் பூவோடு புதிர் எதற்கு பூட்டிட்ட கனி எதற்கு கீழோடு நான் சேர்வேன் உன் தொடையிடையே ஊஞ்சல் ஆட தூக்கம் தனை கெடுத்தாய் தூண்டில் எனை இழுத்தாய் தூரம் நின்று நீ துளிர்த்தால் தூக்கு போல வலி துரத்துதடி உடலும் என்னானும் உறுப்பும் என்னானும் உதிரம் என்னானும் என் உலகமே உன் உயிர்தானே.
எட்டு அடுக்கு மாளிகை வேண்டாம்.. ஏக்கம் இல்லா வாழ்க்கை வேண்டாம்.. பட்டு போல் படுக்கை வேண்டாம்.... பாதம் தொட பலபலப்பு வேண்டாம்.. எச்சுவை அறியாமை வேண்டாம்.. எவையாயினும் அணைக்காமை வேண்டாம்.. உடலிலே பேதம் வேண்டாம்.. உறங்க தான் உழைக்க வேண்டாம்.. ஒளிக்கு சந்திரன் சூரியன் வேண்டாம்.. ஊதினால் வெளிச்சம் மறைய வேண்டாம்.. கூடலில் பாக தேடல் வேண்டாம்.. குழந்தை குதிக்க காரணம் வேண்டாம் வேண்டுவன எல்லாம் வேண்டியவுடன் வேண்டாம்.. வேண்டாதவை ஆயின் வேண்டுதல் முன் வேண்டாம்... சுவையிலே இனிப்பு மட்டும் வேண்டாம்.. சுழற்றி நான் ஆடும் சுகம் மட்டும் வேண்டாம்.. வாழ்க்கையில் இன்பம் மட்டும் வேண்டாம்.. வாழ்வதற்கு வாடகை பணமாக வேண்டாம்.. வாடிய பின்னர் வழக்குகள் வேண்டாம்.. வாதமிருக்கும் மதம் மட்டும் வேண்டாம்.. யாவையும் யவையாயினும் யாவருக்கும் நடப்பன வேண்டும்..அவை இருப்பவன் இல்லாதவன் இன்றி இவ்வுலகில் இருக்கிறவன் இடத்திலேல்லாம் வேண்டும்..
Comments
Post a Comment