காதில் தோற்றதில்லை

ஓசைகள் என்னைச் சுற்றி ஓய்வெடுக்கின்றன.. உண்மையில் உருகும் நிலையில் நான்.. இரவில் தூக்கம் கனவாகியது எனக்கு... துக்கம் மட்டும் துணையாக நிற்கின்றன... காதல் காளை மோதிய போது போதை பாதை சென்றிருந்தேன்.. அதில் மேதை யாவரும் சொன்ன போது காதை நான் இழந்திருந்தேன்....💔 சாகும் வலி நீ தந்த போது மாற்று வழி தெரியவில்லை.. குருடன் மனமும் மறக்க பழகி இருந்தால் மரண நிலை எமக்கு இல்லை.. பேசி பழகிய காலம் எல்லாம் காதுக்குள் கூசுக்கின்றன... கண்ட கரையா நினைவுகள் எல்லாம் கண்ணை கரையாக்கி அலைகளை உருவாக்குகின்றன.. மணம் கழித்து மனம் மாறிவிட்டாய் எளிதாக.. பிணம் ஆகி கணம் தாங்க இயலவில்லை புதிதாக... வந்த இடம் சுகம் இல்லை.. நான் வாழ்ந்த இடம் சுகம் இல்லை.. வந்த நீ மட்டும் சுகம் தந்தாய்.. வாழ நான் இன்றி நீ சென்றாய்... வாழத்தான் நினைக்கிறேன் என்னுள் கூறி கூறி உரைக்கிறேன்.... யாரும் வழிக்கு வருவாதாயில்லை என் வலியை குறைப்பதாயில்லை சென்ற இடம் உனக்கு சிறக்கட்டும் செல்கிறேன் என் காதல் இறக்கட்டும்.... என்னை மறவாமல் இருந்தால் என் மரணப்படுக்கையில் சந்திப்போம்... கண்ணீருடன் நீ நின்றால் என் காதல் அது கலங்கும் அதனால் உன் கண்ணை துடைத்தே என் பிணத்தை காண வா.. அன்பில் அளவுக்கோள் இருந்தால் அதையும் நீ எடுத்து வா.. உன் தந்தையை வீழ்த்தி நான் வீழ்ந்ததை அறிய வா..

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்