வாக்களித்தவன்..வாழாமுடியவில்லை
என்னை கரையாக்கி கொண்டு, உன்னை வெள்ளாடை அணிய வைத்து அழகு பார்த்தேன்..
நான் இங்கு அம்மனமாக அலைக்கிறேன்...
நீ அங்கு அடுத்த மனை வாங்க
ஆரம்பித்துவிட்டாய்....
ஓட்டு கேட்டு வந்த போது
ஊரே ஒன்றுக்கூடி வரவேற்றோம்..
ஓட்டு எண்ணி முடித்த அந்த நாளே
ஒத்துமொத்தமாய் எங்களை ஒதுக்கி வைத்தாய்...
காசு கொடுக்கும் போது உன்
மேல் கரைத் தெரியவில்லை..
காலம் கடந்த பின்னர் என்
கைவிரலை வெட்டிக் கொண்டேன்..
காலம் பதில் கூறும் கூறும்
என்று காட்டுமரம் போல் காத்திருந்தேன்...
கடைசியில் என்னை
வேறோடு சாய்த்துவிட்டாய்
சகதான் வழிச்சேர்த்துவிட்டாய்...
பார்த்து பார்த்து பழகிவிட்டோம்..
நோட்டை வாங்கி வாங்கி
வாழ்ந்து கெட்டோம்...
நம்பிக்கையை வெட்டிவிட்டோம்
வீட்டுக்குள்ளே நாங்கள் முடங்கிவிட்டோம்...
பணம் இல்லா மதம் நாங்கள்
படிக்கதெரிய இனம் நாங்கள்
பட்டினியைப் போக்கிடுவாய்..
பாதை அதை காட்டிடுவாய்..
பழைய உலகம் மறந்து
புது உலகம் மலரும் என்றிருந்தோம்
எங்கள் பகல்கனவு கனவுமட்டும்தான்...
ஏமாந்து விட்டோம் என்ரறிந்தும்
என்ன செய்ய இயலும் எங்களால்
படித்தவனிடம் பணம் இல்லை
இருப்பவனிடம் குணம் இல்லை..
அரசியல்வாதி நீ
உன் வியாதி தீராது
என் சாதி அதற்கு தான்
வழி யேதும் மாறாது..
குழி தோண்டி உள்ளே குதிக்கின்றேன்
உனக்கு வாக்கு அளித்தமைக்கு
மட்டும் அல்ல...
என் வம்சத்தோடு பொருமை
அழியட்டும்.
ஆயுதம் செய்வோம்.
பணத்தால் அல்ல....ஒருவரின் குணத்தால்..
வெட்ட வேண்டியதை வெட்டினால்
தான் ..வளர வேண்டியது வளரும்
நான் உயிரை விடவில்லை
என் உரத்தை விடுத்து தான்
செல்கிறேன்....
அடுத்த தலைமுறைக்கு.
#அரசியல்.
- ச.வி.ஆகாஷ்.
Comments
Post a Comment