மக்களின் போராட்டம்

சூரியனும் உதித்திடுமா...?
சுண்டெலியாய் குதித்திடுமா..?
இலைகள் மலர்ந்திடுமா..?
இல்லையேல் மண்ணோடு விழுந்திடுமா..?
மாங்காய் பழுத்திடுமா...?
மாற்றம் இன்றி மடிந்திடுமா...?
முரசு தான் மொழிந்திடுமா..?
குடியால் அழிந்திடுமா..?
பம்பரம் சுழன்றிடுமா..?
பக்குவமாய் பறந்திடுமா..?
தாமரை மலர்ந்திடுமா..?
நோட்டாவை வீழ்த்திடுமா..?
ஒருகை ஓசை ஒளித்திடுமா..?
உண்மையில் நாட்டை உயர்த்திடுமா..?
கைச் சேர்ந்து கழகம் உருவாகிடுமா..?
கண்காட்சி காட்டி கவிழ்ந்திடுமா..?
தமிழர் ஆனால் வெற்றி வாய்திடுமா..?
ஊரே வாய்விட்டு சிரித்திடுமா..?
கூட்டணியால் கூட்டம் கூடிடுமா..?
குட்டையில் விழும் கதை ஆகிடுமா..?
நோட்டுகள் பறந்து விட்டால்
நோட்டவுக்கு வேலை யில்லாமல் போகிடுமா..?
போர்க்களமா ?புதைக்குமிடமா..?
வெற்றி கண்டவன்
நாட்டை நிமிர்த்த வந்தானா.. இல்லை
நோட்டை பறிக்க வந்தானா..
ஆட்டம் முடிந்த பின்
மக்களின் போராட்டம் ஆரம்பம்.








Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்