தாயே நீயாக...

முத்தங்கள் நான் தரும் போது
கண்களை நீ மூடிக்கொள்,
மோகத்தால் தான் வாடும் போது
உன் இதழை எனக்கு ஒதுக்கி கொள்...
பாடல் நான் பாடினால் உனக்காக என உணர்ந்து கொள்...
கவிதை தான் எழுதினால்
பிழையோடு ரசித்து கொள்...
மார்போடு நான் சாய்ந்தால்
தாயாக மாறிக்கொள்...
நான் தகப்பனாக மாறத்தான்
தகுந்த காலம் கணித்துக்கொள்...
உன் காலில் நான் விழும் போது
என் கடவுள் நீ என உணர்ந்து கொள்..
என் காலில் நீ விழும் போது
இயலவில்லையே என கவலைக்
கொள்....
உண்ண அமரும் போது நான் குழந்தை என அறிந்துக் கொள்..
உறங்க செல்லும் போது
என் உணர்வுகளை கொஞ்சம் நினைத்துக் கொள்..
இறவுகளில் உடையை நீயும் குறைத்துக்
கொள்...
என்றும் நமக்கு தூக்கம் இல்லை
என என்னை தான் அடித்து கொள்...
வேலைக்கு செல்லும் போது வேண்டாம் என நீயே சொல்...
வெளிச்சென்று நான் திரும்பும் போது வேதனையை பகிர்ந்து கொள்....
வெட்டிப் பேச்சிடையே என் விரலுக்கு அனுமதி சொல்.....
வேறு பெண்ணிடம் நான் வழிந்தால் கண்களால் குத்திக் கொள்...
கவலையில் நான் இருந்தால்
உன் கண்ணீரை துடைத்து கொள்....
காற்றும் தான் உனக்கு வேண்டாம்
என்னையே சுவாசித்து கொள்....
ஆயிரம் குழந்தை வேண்டும் என பொறமைக் கொள்..
அதில் நான் மூத்தவன் என்பதையும்
மனதில் கொள்...
தாய் ஆன பின்பு சிறிது குழந்தையையையும் கவனித்துக் கொள்...
தகப்பன் நான் என்பதை
என்றும் நீ மறந்து கொள்..
காதல் காலம் இருக்கும் வரை
உணர்ந்து கொள்...
கடல் வற்றினாலும் என் அன்பு
மாறாது அறிந்து கொள்...
ஆடி நான் அடங்கும் போதும்
ஆன்மா உன்னுள்..
அழுகை உனக்கு எனில்
வலி தான் என்னுள்...
என்றும் உனக்காக வாழ்வேன்...
உன்னுள் நிரைந்து ...இன்பத்தை
தாந்தே நான் சாவேன்...

              -ச.வி.ஆகாஷ்.


Comments

Post a Comment

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்