வாக்களிப்போம் வாய்மைக்கு.
வாழைப் போல் வாக்களித்தோம்..
நம் வம்சம் மூலம் அதை காக்க வைத்தோம்...
வாக்களித்த முன்னும் பின்னும் தான்...
வாடிய மரமாய் வாழ்ந்திருந்தோம்..
சாதி மதம் என பார்த்து சாக்கடைக்குள் நாம் விழுந்தோம்..
சற்று யோசித்து இருந்தால்
சர்காரை, சத்தியம் ஆழ செய்திருப்போம்....
விளம்பரங்கள் பிரபலங்கள் என பார்த்து வீதி வரைத்தான் வந்துவிட்டோம்..
வீண் பேச்சு என்று எண்ணிதான்
அரசியலை வெட்டியே எரிந்து விட்டோம்..
வெள்ளாடை அணிந்தவன் எல்லாம்...வெள்ளை மனம் கொண்டவன் என்று ...அவன் நோட்டுன் வந்தவுடன் நம் நாட்டையே
கொடுத்து விட்டோம்..
விரல் கரையை வைத்து கொண்டு
நாம் என்ன செய்ய..?என்று நினைக்காமல் இருந்திருந்தால்
வீணாக தலை மேல் கைவைத்து இருக்க மாட்டோம்....
ஒரு விரலை வைத்துக்கொண்டு
நாம் என்ன செய்ய முடியும்...
நோட்டு கொண்டு வருபவரை
நோட்டா வால் தாக்க முடியும்....
இளைஞர்கள் வரவேண்டும் மெனில்....மேடைப் பேச்சு மட்டும்
போதா...அவனை மேடையில்
ஏற்ற நம் ஓட்டும் தான் வேண்டும்.
கையின் கரையை நீக்க
ஐந்து நாள் கூட தேவையில்லை..
ஆனால் அதன் விளைவை நீக்க
ஐந்து வருடம் தான் ஆகிவிடும்..
சிந்தனையில் வைத்துவிடுங்கள்;
சிறிது சிந்தித்தே உங்கள் வாக்கைக்
கொடுங்கள்..
இறந்தவுடன் உறவு பயன்னில்லை..
இறந்தகாலம் நமக்கு இன்று தேவையில்லை...
ஓட்டுடன் உணர்வையும் கொள்ளுங்கள்
நாளைய உங்கள் நிலைக்கு இன்றைய நீங்களே காரணம்
வெல்லம் வீட்டுக்குள் வந்தாலும்
விலைவாசி வீட்டையே திண்றாலும்
வயல்கள் தனியார்வச பட்டாலும்
வம்சமே இல்லாமல் சென்றாலும்
உம் விரலே அதற்கு வித்திட்டது
வாக்களிப்போம் வாய்மைக்கு
மன்னன் எவ்வழி ;
மக்கள் அவ்வழி..
வாழ்க தமிழினம்! வளர்க நற்றமிழர்!
Comments
Post a Comment