தாய் நீ
உன்னை ஈன்றெடுத்த தாய்க்கு நன்றி சொல்வேன்;
என்னை கொல்லும் இந்த காதல் துன்பத்தை யாரிடம் எங்கு சொல்வேன்?
உன் மிதிஅடிப்போல் போல் ஒட்டிக் கொள்ளும் இன்பம் நான் என்று கொள்வேன்..?
கையோடு கை இணைந்து உன் நிழல் போல் நான் என்று செல்வேன்.....
பக்கங்கள் பல நிரப்ப உன்பாதம் அது உதவும் , பல்லாண்டு காத்திருக்கிறேன்-
என்று திறக்கும் என் காதல் கதவும்,
கண்கள் இருக்கையில் தேவையில்லை இரவு நிலவும்..,
கருவிழிகளைச் சிமிட்டி என் கண்ணத்தை அதுவும் அறையும்;
உயிரேன உன்னை நினைத்தேன் தோழி...
உன்னை என் உலகம் என விடையளித்தேன்,
விழிகளில் உன்னை நிரைத்தேன் என் வினைகளில் உன்னை விதைத்தேன் !
கண்களை மட்டும் விட்டுவிடு உன்னைக் காண்பதற்கு மட்டும்தான், மற்றதை எல்லாம் நீ வெட்டிவிடு என் உயிர் என்றும் உனக்கு மட்டும்தான்: எண்ணங்கள் அவை மோதிக்கொள்ளும்,
எழுத்துக்கள் தன்னுள் போதை கொள்ளும்,
காவியமும் உன் மேல் காதல் கொள்ளும்,
காகிதமும் தன் கர்வம் கொள்ளும்; உயிரை விடச் சொன்னால் ஒரு நொடி யோசிக்க மாட்டேன், உண்மையில் உன்னைத் தவிர வேறு எதையும் நான் யாசிக்க மாட்டேன்; பொருள் இன்றி இருந்த இந்தச் சொல்லுக்கு ,இலக்கணம் வகுத்து- இலக்கியம் கொடுத்து, இந்நாள்வரை வாழவைத்தாய் -என் தாய் ,உன்னிடம் பிரார்த்தனை செய்ய வைத்தாய்.
-ச.வி.ஆகாஷ்.
Comments
Post a Comment