தாய்மை
ஒரு பெண்ணிடம் தான் ஆசை கொண்டேன்; அவள் பிணத்திடத்தும் மோகம் கொண்டேன்;தலைக்கால் அறியாமல் அவள்பின் சென்றேன் என் மேல் எச்சம் படும் போதும் மறவாமல் முன் நின்றேன்;
காலங்கள் நதியாயின,அவள் மேல் காமம் மலையாயின, முன் சென்று நீ வேண்டும் என்றேன் -அவள் முன்னதாக நான் கூறுவன வேண்டும் என்றாள்
நிலவா ?நிலமா ?என் விழியா? விரலா? உயிரா? உடலா?இல்லை உலகா? உறவா ?பொன்னா? பொருளா? இப்புவியா? புகழா..?கவியா.? காவியமா? கண்ணன் குழலா?கலைஞனின் இதழா..?எவை வேண்டும் என்றேன்.
உன் தாயின் இதயம் வேண்டும் என்றாள் அவள்.
ஒளி போல் விரைந்து; என் தாயிடம் அமர்ந்து, உன் துடிப்பு என் கையில் வேண்டும் என் காதலி என்னுடன் வருவதற்கு என்றேன்;
என்னுடன் உரவாடிய இருகேள்விகள்
இதுதான் .... உன்னிடம் அவள் சேரும் வரம் புரிவாளா..??உன்னை தன் உயிரேன உரைவாளா..?
ஆம் என்று நான் வாக்களித்தேன்.
உயிரை உடைத்து தன் இதயத்தை
என் கையில் கொடுத்தாள்..
அவள் கேட்டத்தை பெற்றோம் என்று
பின்னங்கால் புடரியில் பட ஓடினேன்.
கல்லொன்று காலை இழுக்க,
என் கையில் இருந்த இதயம் வழுக்கை ,
காலோடு கால் பின்னிக் கரையில்
விழுந்த போது
தரையில் இருந்த என் தாயின் இதயம் என்னைப் பார்க்க
"வலிக்கிறதா..?..பார்த்து செல் .."
என்ற குரல் ஒன்று கேட்டது.
என் உயிர் அன்று பிரிக்கிறது.
- ச.வி.ஆகாஷ்.
Comments
Post a Comment